/tamil-ie/media/media_files/uploads/2023/03/fixed-deposit-5.webp)
இண்டஸ்இந்த் வங்கி புதிய ஃபிக்ஸட் டெபாசிட் (FD) விகிதங்கள் ஆக.5 முதல் அமலுக்குவந்துள்ளன.
Bank of India new FD: பேங்க் ஆஃப் இந்தியா ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. அதன்படி 400 நாள்கள் கால அளவு கொண்ட மழைக்கால ஃபிக்ஸட் டெபாசிட்டை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதனுடன், வங்கி 1 ஆண்டு காலத்திற்கான FD வட்டி விகிதத்தை 100 bps (1%) 7% லிருந்து 6% ஆக குறைத்துள்ளது. திருத்தத்தைத் தொடர்ந்து, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு வங்கி 3 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரையிலான வட்டி விகிதம் சாதாரண வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
வட்டி விகிதம்
தொடர்ந்து சாதாரண வாடிக்கையாளர்களுக்கு 7 நாள்கள் முதல் 45 நாள்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு வங்கி 3 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
46 நாள்கள் முதல் 179 நாள்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 4.50% வட்டி விகிதம் கிடைக்கும். 180 நாள்கள் முதல் 269 நாள்கள் வரை முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு வங்கி 5.00 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
அதேபோல், 270 நாள்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான காலப்பகுதிக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 5.50 சதவீத வட்டி விகிதத்தை வங்கி செலுத்துகிறது.
மூத்தக் குடிமக்கள்
மூத்தக் குடிமக்களை பொறுத்தவரை வங்கி 91 நாள்கள் முதல் 179 நாள்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 4.5 சதவீதம் வட்டியும், 180 முதல் 269 நாள்கள் வரையிலான டெபாசிட்டுக்கு 5.5 சதவீதம் வட்டியும், 270 நாள்கள் முதல் 1 ஆண்டுக்குள்ளான எஃப்.டிக்கு 6 சதவீதம் வட்டியும் வழங்குகிறது.
அதிகப்பட்சமாக 400 நாள்கள் மழைக்கால ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 7.75 சதவீதம் வட்டி கிடைக்கும். தொடர்ந்து 5 முதல் 8 ஆண்டுகள் வரையிலான எஃப்.டி.க்கு 6.75 சதவீதம் வட்டியும், 8 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டிக்கு 6.75 சதவீதம் வட்டியும் கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.