/tamil-ie/media/media_files/uploads/2023/03/rupee-pixabay-1200-1-2.jpg)
பேங்க் ஆஃப் இந்தியா 175 நாள் நிரந்தர வைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
fixed-deposits | பேங்க் ஆஃப் இந்தியா (BoI) ₹2 கோடி மற்றும் அதற்கு மேல் ரூ.50 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு ஆண்டுக்கு 7.50 சதவீத வட்டியில் 175 நாள் தவணைக்கால நிலையான வைப்புத்தொகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மற்றும் பே ங்க் ஆஃப் பரோடா (பிஓபி) ஆகியவை தங்கள் வைப்பு விகிதங்களை உயர்த்தியதைத் தொடர்ந்து பேங்க் ஆஃப் இந்தியாவும் எஃப்டி விகிதங்களை உயர்த்தி உள்ளது.
இதுகுறித்து பொதுத்துறை வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சூப்பர் ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட், ஜனவரி 1, 2024 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, கார்ப்பரேட்கள் தங்கள் உபரி நிதியை குறுகிய காலத்திற்கு பயன்படுத்த அதிக மகசூல் தரும் வழியாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு, BoI தற்போது 175 நாள் தவணைக்காலத்திற்கு 4.50 சதவீத வட்டியை செலுத்துகிறது. 2 ஆண்டுகளுக்கும் குறைவான வைப்புத் தொகையில், வங்கி தற்போது செலுத்தும் அதிகபட்ச வட்டி விகிதம் 2 ஆண்டு வைப்புத்தொகைக்கு 7.25 சதவீதமாகும்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
எஸ்பிஐ, டிசம்பர் 27, 2023 முதல் ₹2 கோடிக்குக் குறைவான டெர்ம் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை 25-50 அடிப்படைப் புள்ளிகள் வரை உயர்த்தி உள்ளது.
மேலும் ₹2 கோடி மற்றும் அதற்கு மேல் உள்ள டெர்ம் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை 5-50 பிபிஎஸ் உயர்த்தியது.
பேங்க் ஆஃப் பரோடா
பேங்க் ஆஃப் பரோடா உள்நாட்டு சில்லறை டெர்ம் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை 10 முதல் 125 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) உயர்த்தி உள்ளது.
BoB இன் திருத்தப்பட்ட கால வைப்பு விகிதங்கள், டிசம்பர் 29, 2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இது, ரூ. 2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்குப் பொருந்தும்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.