Fixed Deposits | பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு அதன் நிலையான வைப்புகளின் (எஃப்.டி) விகிதங்களை அதிகரிப்பதாக வியாழக்கிழமை (நவ.30) அறிவித்தது.
அதன்படி, ₹2 கோடி மற்றும் அதற்கு மேல் ₹10 கோடிக்கு குறைவாக 46 நாள்கள் முதல் ஒரு வருடம் வரை முதிர்ச்சியுடன் நிலையான வைப்புகளுக்கான மாற்றப்பட்ட விகிதங்கள் டிசம்பர் 1 வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/ls-money-1-1.jpg)
பேங்க் ஆஃப் இந்தியா அதன் எஃப்.டி விகிதங்களை குறுகிய கால டெபாசிட்களுக்கும் அதிகரித்துள்ளது. 46 நாள்கள் முதல் 90 நாள்கள் டெபாசிட்கால வட்டியை 5.25%ஆக உயர்த்தி உள்ளது.
91 நாள்கள் முதல் 179 நாள்கள், 180 நாள்கள் முதல் 210 நாள்கள் வரையிலான டெபாசிட் வட்டியை 6.25%ஆகவும், 211 நாள்களுக்கும் குறைவான டெபாசிட் வட்டிய 6.50% ஆகவும் திருத்தி உள்ளது.
பேங்க் ஆஃப் இந்தியா ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம்
வ.எண் |
காலம் |
வட்டி விகிதம் (%) |
01 |
46-90 நாள்கள் |
5.25 % |
02 |
91-179 நாள்கள் |
6.00 % |
03 |
180-210 நாள்கள் |
6.25 % |
04 |
211 < 1 ஆண்டு |
6.50 % |
05 |
1 ஆண்டு |
7.25 % |
தொடர்ந்து, 1 ஆண்டு காலம் டெபாசிட்டுக்கு 7.25% வரை வட்டி கிடைக்கும். முன்னதாக நவம்பர் 1 ஆம் தேதி, வங்கி இரண்டு ஆண்டு காலத்திற்கு 2 கோருக்கு குறைவான தொகைகளுக்கான அனைத்து வைப்புகளின் விகிதத்தையும் உயர்த்தியது.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/fixed-deposit-5.webp)
சூப்பர் மூத்த குடிமக்கள், மூத்த குடிமக்கள் மற்றும் பிறருக்கு 2 ஆண்டு விதிமுறைகளைக் கொண்ட எஃப்.டி.க்களுக்கு, வங்கி முறையே 7.9%, 7.75%மற்றும் 7.25%வட்டி விகிதத்தை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“