பொதுவாக நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் இல்லத்தரசிகள் பிக்ஸட் டெபாசிட் போன்றவற்றில் முதலீடு செய்வதை அதிகம் விரும்புகிறார்கள். நிலையான வருமானம், பாதுகாப்பு, வட்டி விகிதங்கள் போன்ற காரணங்களால் வங்கிகளின் நிலையான வைப்பு தொகை ஒரு கவர்ச்சிகரமான முதலீட்டு விருப்பமாக மாறிவிட்டது.
பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது நிலையான வைப்புக்களுக்கான வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. ரூ.2கோடிக்கும் குறைவான 7 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான வெவ்வேறு டெபாசிட்களுக்கு வெவ்வேறு வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரெகுலர் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள்
7 முதல் 14 நாட்களுக்கு -2.85%
15 முதல் 30 நாட்களுக்கு -2.85%
31 முதல் 45 நாட்களுக்கு - 2.85%
46 நாட்கள் முதல் 90 நாட்களுக்கு - 3.85%
91 நாட்கள் முதல் 179 நாட்களுக்கு - 3.85%
180 நாட்கள் முதல் 269 நாட்கள் வரை 4.35%
270 நாட்கள் முதல் 1 வருடம் வரை 4.35%
1 வருடம் அல்லது அதற்கு மேல் ஆனால் 2 வருடங்களுக்குள் - 5.00%
2 ஆண்டுகள் & அதற்கு மேல் 3 வருடங்களுக்குள்-5.05%
3 ஆண்டுகள் & அதற்கு மேல் 5 வருடங்களுக்குள்-5.05%
5 ஆண்டுகள் & அதற்கு மேல் 8 வருடங்களுக்குள்-5.05%
8 ஆண்டுகள் & அதற்கு மேல் 10 ஆண்டுகள் - 5.05%
தேர்ந்தெடுக்கப்பட்ட முதிர்வு காலங்களில் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது.
மூத்த குடிமக்களுக்கான பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள்
7 முதல் 14 நாட்களுக்கு -2.85%
15 முதல் 30 நாட்களுக்கு -2.85%
31 முதல் 45 நாட்களுக்கு - 2.85%
46 நாட்கள் முதல் 90 நாட்களுக்கு - 3.85%
91 நாட்கள் முதல் 179 நாட்களுக்கு - 3.85%
180 நாட்கள் முதல் 269 நாட்கள் வரை 4.85%
270 நாட்கள் முதல் 1 வருடம் வரை 4.85%
1 வருடம் அல்லது அதற்கு மேல் ஆனால் 2 வருடங்களுக்குள் - 5.50%
2 ஆண்டுகள் & அதற்கு மேல் 3 வருடங்களுக்குள்-5.55%
3 ஆண்டுகள் & அதற்கு மேல் 5 வருடங்களுக்குள்-5.55%
5 ஆண்டுகள் & அதற்கு மேல் 8 வருடங்களுக்குள்-5.55%
8 ஆண்டுகள் & அதற்கு மேல் 10 ஆண்டுகள் - 5.55%
அபராதம்
ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக டெபாசிட் செய்து 12 மாதங்கள் முடிந்தபிறகு முன்கூட்டியே திரும்ப பெற்றால் அபராதம் கிடையாது.
ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக டெபாசிட் செய்து 12 மாதங்கள் முடிவதற்குள் முன்கூட்டியே திரும்ப பெற்றால் 0.50% அபராதம் வசூலிக்கப்படும்.
ரூ.5 லட்சம் மற்றும் அதற்கு மேல் டெபாசிட் செய்து முன்கூட்டியே திரும்ப பெற்றால் 1.00% அபராதம் வசூலிக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil