பேங்க் ஆஃப் இந்தியா (BoI) வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியை மாதத்தின் தொடக்கத்தில் வழங்கியுள்ளது.
இந்தியாவின் முக்கிய பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா, 180 நாட்கள் மற்றும் ஒரு வருடத்திற்கும் குறைவான கால அவகாசம் கொண்ட அதன் குறுகிய கால மற்றும் நடுத்தர கால ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது.
வங்கியானது இப்போது மூத்தக் குடிமக்கள் (Non-Callable Deposit scheme) 666 நாட்கள் எஃப்.டி-க்கு ஆண்டுக்கு 8.10% என்ற அதிகபட்ச வட்டி விகிதத்தை வழங்குகிறது.
மேலும், வங்கி 180 நாட்கள் முதல் 1 வருடத்திற்கு குறைவான 3 கோடி ரூபாய்க்கும் குறைவான நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை 6.00% ஆக உயர்த்தியுள்ளது.
கூடுதலாக, வங்கியானது ரூ.3 கோடியில் இருந்து ரூ.10 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை 6.50% ஆகவும், 211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கு குறைவான காலத்திற்கு 6.75% ஆகவும் உயர்த்தியுள்ளது.
தொடர்ந்து, சூப்பர் சீனியர் சிட்டிசன்கள் செய்யும் டெபாசிட்டுகளுக்கு 0.65% கூடுதல் வட்டி விகிதமும், 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட முதிர்வு காலத்துடன் கூடிய நிலையான வைப்புகளுக்கு 0.50% வீதம் ரூ. 3 கோடிக்குக் குறைவான டெபாசிட்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும், வங்கி அதன் ‘666 நாட்கள் – நிலையான வைப்பு’ திட்டத்தை செயல்படுத்துகிறது, இது பொது மக்கள் உட்பட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 7.30% அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது.
பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நிலையான வைப்புத்தொகையைத் தொடங்க வாடிக்கையாளர்கள் பாங்க் ஆஃப் இந்தியா கிளைக்கு சென்று அல்லது BOI ஆம்னி நியோ ஆப் மூலமாகவும் முதலீடு செய்துகொள்ளலாம். ஃபிக்ஸட் டெபாசிட் புதுப்பிக்கப்பட்ட வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“