bank savings account open bank savings account online : தபால் நிலையத்தில் 9 விதமான முதலீட்டு முறைகள் உள்ளன. இந்திய அரசாங்கத்தின் சிறு சேமிப்புத் திட்டங்கள் அவை: சேமிப்பு கணக்கு, தேசிய சேமிப்பு கால வைப்பு கணக்கு (Recurring Deposit Account), தேசிய சேமிப்பு வைப்புக் கணக்கு, தேசிய சேமிப்பு மாத வருமானம் கணக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டக் கணக்கு, பொது வட்டி சேமிப்பு கணக்கு, தேசிய சேமிப்பு சான்றிதழ்கல் கணக்கு மற்றும் கிசான் விகாஸ் பத்திர கணக்கு ம்ற்றும் சுகன்யா சம்ரிதி கணக்கு ஆகிய கணக்கு வகைகள் உள்ளன.
Advertisment
தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் ஆண்டுக்கு 4 சதவீதம் என்ற விகிதத்தில் வட்டி வழங்குகிறது. அஞ்சல் அலுவலகம் சேமிப்பு கணக்கில் குறைந்த பட்ச இருப்புத் தொகை ரூ.20 மட்டுமே. அஞ்சல் அலுவலகத்தின் காசோலை புத்தக வசதியுடன் சந்தா இல்லாமல் ஒரு சேமிப்பு கணக்கிற்கு குறைந்தபட்ச இருப்பு ரூ.50 மட்டுமே. செக் புக் வசதி வேண்டுமென்றால் ரூ.500 ஐ குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டியது அவசியம்.
இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது சேமிப்பு கணக்கு மற்றும் நடப்பு வங்கி கணக்கு சேவையை வழங்குகிறது. பணப் பரிமாற்றம் மற்றும் நேரடி பயன் பரிமாற்ற சேவைகள், பிற கட்டணங்களை செலுத்தும் சேவையை வழங்குகிறது.
இந்திய அஞ்சல் பணமளிப்பு வங்கி மூன்று வகையான கணக்குகளை வழங்குகிறது. வழக்கமான கணக்கு, டிஜிட்டல் மற்றும் அடிப்படையான என்று 3 விதமான கணக்கினை வழங்குகிறது. மூன்று வகையான கணக்கிலும் குறைந்த பட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஜீரோ பேலன்ஸிலும் கணக்கினை வைத்திருக்க முடியும்.
சிறுசேமிப்புக் கணக்கிற்கும் வட்டி விகிதங்கள் பொருந்தும். 9விதமான சேமிப்பு திட்டங்களுக்கு 7 சதவீதம் முதல் 8.7 சதவீதம் வரை வழங்குகின்றன. இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்கில் தொடங்கி சேமித்து வரும் கணக்குகள் இந்திய வருமான வரிச் சட்டத்தின் 80சி இன் கீழ் வரி விலக்கு உண்டு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news