/tamil-ie/media/media_files/uploads/2021/01/money.jpg)
bank schemes savings money savings scheme : வட்டியுடன் நல்ல லாபம் பெற இந்த திட்டங்களை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இதுவே சிறந்த முதலீடாக இருக்கும். சந்தேகம் வேண்டாம். தகவலை தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்.
இன்சூரன்ஸ் முதலீடு:
யூனிட் லிங்டு இன்சூரன்ஸ் திட்டம் (Unit linked insurance plan) என்பது ஆயுள் காப்பீடு திட்டங்களுடன் இணைந்து முதலீடு செய்யும் ஆப்சனையும் வழங்குகிறது. இதன் மூலம் நீங்கள் ஸ்டாக்ஸ் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். 5 ஆண்டுகள் வரை நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். சந்தை நிலவரப்படி உங்களுக்கான தொகை கிடைக்கும்.
வரிச்சலுகை தேவைப்படுதவற்கு ஏற்ப ஸ்டாக்ஸ்களில் இருந்து பத்திரங்களுக்கு பரஸ்பர முறையில் மாற்றம் செய்துகொள்ள அனுமதி உண்டு. இந்த திட்டத்தில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு உங்களின் முதலீட்டு வரிச்சலுகை பெற்றுக்கொள்ளலாம். குறைந்த பணப் புழக்கம் மற்றும் காப்பீடு அம்சங்கள் போதிய அளவில் இல்லாமல் இருப்பது நெகடிவாக பார்க்கப்படுகிறது.
ELSS அல்லது ஈக்விட்டி சேமிப்புத் திட்டம் என்பது ஒரு வகை மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஆகும். இவை முதலீடு மற்றும் வரிசேமிப்பு என இருவகையான நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இதில் முதலீடு செய்யப்படும் பணத்தை 3 ஆண்டுகளுக்கு எதுவும் செய்ய முடியாது.
வருமான வரியின் 80 சி பிரிவின் கீழ், உங்கள் வருடாந்திர வருமானத்திலிருந்து ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெறலாம். SIP எனப்படும் சிஸ்டமேடிக் இன்வெஸ்மென்ட் திட்டத்தை இதன்மூலம் நீங்கள் பெறலாம். வரி சேமிப்பு முதலீடுகளுக்கு 13.72% வரை வட்டி கிடைக்கிறது. ஆபத்து என்று பார்த்தால் நிலையற்ற வருமானமாக இருக்கும். ரிஸ்க் எடுக்க தயங்குபவர்களுக்கு இந்த திட்டம் உதவாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us