bank services bank free services govt bank : முதியோர், மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும், இனி வங்கிகளுக்கு செல்லாமலேயே வங்கிச் சேவையை வீட்டிலேயே பெறும் வசதியை, பொதுத் துறை வங்கிளில் உள்ளன. முக்கிய வங்கி சேவைகளைப் பெற, போன் செய்தால் போதும்; வங்கியின் பிரதிநிதி வீட்டுக்கே வந்து அந்த சேவையை அளிப்பார்.
1. பொதுத் துறை வங்கி சேவையை எளிமையாக்கும் வகையில், ‘ஈஸ்’ என்ற திட்டம், 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, வங்கி சேவையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
2. வங்கியின் கால் சென்டர், இணையதளம் அல்லது ‘மொபைல் ஆப்’ மூலமாக நமக்கு தேவையான சேவைக்கு விண்ணப்பிக்கலாம். முதல் கட்டமாக, நாடு முழுதும் அமைக்கப்பட்டுள்ள, 100 சேவை மையங்களைச் சேர்ந்த ஊழியர், வீடு தேடி வந்து அந்த சேவையை அளிப்பார்.தற்போதைக்கு, காசோலை கேட்டு விண்ணப்பிப்பது, வங்கிக் கணக்கில் காசோலையை செலுத்துவது, கணக்கு அறிக்கை உள்ளிட்ட சேவைகளைப் பெறலாம். ரொக்க சேவை, அடுத்த மாதத்தில் இருந்து துவங்க உள்ளது.
3. இந்த சேவைகளைப் பெறுவதற்கான கட்டணமாக, சிறிய தொகை வசூலிக்கப்படும். முதியோர், மாற்றுத் திறனாளி உள்ளிட்டோருக்கு இந்த திட்டம் மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil