வங்கிகளின் பல்வேறு சங்கங்களின் ஒருங்கிணைந்த சங்கமான யூனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
வங்கிகளில் 5 நாள்கள் பணி, பென்ஷன் புதுப்பிப்பு, குடியிருப்பு சலுகை பிரச்னைகள், தேசிய ஓய்வூதிய திட்டம் எதிர்ப்பு, சம்பளம் மறுஆய்வு, அனைத்து தரப்பிலும் தேவையான ஆட்களை வேலைக்கு எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் 2 நாள்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டம் ஜன.30 மற்றும் 31 ஆகிய இரு தினங்கள் நடைபெறவுள்ளது. வங்கிக்கு ஏற்கனவே ஜன.26ஆம் தேதி குடியரசுத் தின பொதுவிடுமுறை ஆகும். அதன் பின்னர் ஒரு நாள் மட்டுமே (வெள்ளிக்கிழமை) ஜனவரியில் வங்கி இயங்கும். அடுத்து பிப்ரவரியில் தான் வங்கி இயங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில், 28,29 சனி, ஞாயிறு ஆகும். இந்த நிலையில் 30,31 ஆகிய இரு தினங்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது வங்கி சேவையை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கி ஊழியர்கள் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த ஸ்டிரைக் குறித்த முடிவு வியாழக்கிழமை (ஜன.11) மும்பையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/