பொங்கல் ஷாப்பிங் அப்புறம் இருக்கட்டும்..2 நாளைக்கு பேங்க் கிடையாது!

Central Trade Unions, Bank Employees Calls for 2 Day Strike: வங்கிச்சேவை பாதிக்கும் அபாயம்

நாடு முழுவதும் நாளை 8-ம் தேதி மற்றும் 9-ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக மத்திய வங்கி ஊழியர் சங்கங்களான ஐ.என்.டி.யூ.சி, ஏ.ஐ.டி.யூ.சி, உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் நாளை 8-ம் தேதி மற்றும் 9-ம் தேதி ஆகிய 2 நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது.

இதுகுறித்து ஐடிபிஐ, பேங்க் ஆஃப் பரோடா, அலாகாபாத் வங்கி ஆகிய வங்கிகள், மும்பை பங்குச் சந்தைக்கு அறிக்கை அனுப்பியுள்ளன. அதில் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, வங்கி ஊழியர்கள் பெடரேஷன் ஆகியவை வரும் 8,9ஆம் தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால், வங்கிச்சேவை பாதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

Bank Employees Calls for 2 Day Strike, Bank Services May Get Interrupted: மீண்டும் வங்கிகள் வேலை நிறுத்தம்!

3 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மாதம் 21, 26ஆம் தேதி இரு நாட்களில் 9 வங்கி சங்கங்கள், வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால், கோடிக்கணக்கிலான வங்கிப்பரிவரித்தனை பாதிக்கப்பட்டது. இந்த சூழலில் மீண்டும் வங்கிகள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் வெங்கடாசலம்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தார். வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு இந்தியா ஆகிய 2 வங்கி ஊழியர்கள் சங்கமும் ஆதரவு அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close