இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளை உள்ளடக்கிய வார இறுதி விடுமுறைகள் உட்பட நாடு முழுவதும் உள்ள பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் டிசம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட 12 நாள்களுக்கு மூடப்பட்டிருக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறைகளின் பட்டியலை வெளியிடுகிறது. நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் அதன் முக்கியத்துவத்தைப் பொறுத்து, விடுமுறை நாள்கள் ஒதுக்கப்பட்டிருக்கும்.
அந்த வகையில், நவம்பர் மாதத்திற்கான RBI வெளியிட்ட பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் நிதி தேவையை திட்டமிடுவதற்கு முன்பு இதனை சரிபார்த்துக் கொள்ளவும்.
டிசம்பர் 2022ல் வங்கி விடுமுறை
டிசம்பர் 3: புனித பிரான்சிஸ் சேவியரின் விழா - பனாஜி (கோவா)
டிசம்பர் 12: பா-டோகன் நெங்மிஞ்சா சங்மா - ஷில்லாங்
டிசம்பர் 19: கோவா விடுதலை நாள் - பனாஜி
டிசம்பர் 24: கிறிஸ்துமஸ் விழா - ஷில்லாங்
டிசம்பர் 26: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்/லோசூங்/நம்சூங் - ஐஸ்வால், காங்டாக், ஷில்லாங்
டிசம்பர் 29: குரு கோவிந்த் சிங் ஜி பிறந்தநாள் - சண்டிகர்
டிசம்பர் 30: யு கியாங் நங்பா - ஷில்லாங்
டிசம்பர் 31: புத்தாண்டு ஈவ் - ஐஸ்வால்
டிசம்பர் 2022 இல் வார இறுதி விடுமுறைகள்
டிசம்பர் 4: வாராந்திர விடுமுறை (ஞாயிறு)
டிசம்பர் 10: வாராந்திர விடுமுறை (இரண்டாவது சனிக்கிழமை)
டிசம்பர் 11: வாராந்திர விடுமுறை (ஞாயிறு)
டிசம்பர் 24: வாராந்திர விடுமுறை (நான்காவது சனிக்கிழமை)
டிசம்பர் 25: வாராந்திர விடுமுறை (ஞாயிறு)
மேற்கூறிய நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், UPI சேவைகள் உள்ளிட்ட ஆன்லைன் சேவைகள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil