ரூ. 2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது, ஆனால் தனியார் வங்கிகள் இதற்கு அடையாள அட்டை கேட்பதால் பொது மக்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி கடந்த வாரம் ரூ. 2000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக அறிவித்தது. இந்நிலையில் நேற்று முதல் செப்டம்பர் 30 வரை வங்கிகளில் ரூ. 2000-தை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியானது.
ரூ. 2000 நோட்டுகளை வங்கியில் செலுத்தி அதற்கான பணத்தை, அல்லது வங்கி கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் பாரத் ஸ்டேட் வங்கி, வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்தை பெற்றுக்கொண்டு, அதற்கு ஏற்பட பணத்தை கொடுக்கிறது. இந்நிலையில் எச்.டி.எப்.சி, ஐ.சி.ஐ.சி வங்கிகள் விண்ணப்பத்தை நிரப்பவும், இத்துடன் அடையாள அட்டையையும் காண்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இது தொடர்பாக தனியார் வங்கியில் பணிபுரியும் மூத்த அதிகாரியிடம் பேசுகையில் “ தனியார் வங்கியில், வங்கி கணக்கு வைத்திருந்தால், சமந்தப்பட்ட நபர் குறித்த தகவல் வங்கிக்கு தெரியும். ஆனால் மற்றவர்கள் யார் என்ற விவரங்கள் எதுவும் தெரியாது. ரூ.2000 பெறுவது தொடர்பாக ரிசர்வ் வங்கி தெளிவான விவரத்தை வங்கிகளுக்கு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தனியார் வங்கிகளில் மாற்றப்படும் பணம் தொடர்பான தகவலை நாங்கள் சமர்பிக்க வேண்டும் என்ற நிலை ஏற்படும்போது. இது உதவியாக இருக்கும் “ என்று கூறினார்.
இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில், எச்.டி.எப். சி ஏன் மக்களிடம் அடையாள சான்றுகளை கேட்டு சிக்கலை ஏற்படுத்துவதாக வாடிக்கையாளர் கேட்டப்போது, அதற்கு எச்.டி.எப்.சி பதிலளித்தது, “ ஒரு சேவையை பெற விரும்பும் நீங்கள், அதற்கான விண்ணப்பப் படிவத்தைதான் பூர்த்தி செய்யச் சொல்கிறோம். கூடுதலாக உங்கள் அடையாள அட்டை தேவைப்படுகிறது” என்று பதிலளித்தார்.
இந்நிலையில் பாரத் ஸ்டேட் வங்கியை போல, பேங்க ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் எந்த அடையாள அட்டையையும் கேட்டவில்லை.
இந்நிலையில் வங்கிகளில் மட்டும் அல்லாது, சூப்பர் மார்கெட், பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும், பொதுமக்கள் ரூ. 2000 கொடுத்து, மாற்ற முயற்சி செய்கின்றனர்.
இந்நிலையில் ஒருவர், ஒரு நாளை ரூ. 20,000 வரை தொகையை, ரூ. 2000 நோட்டுகளை கொடுத்து மாற்றி பெற்றுகொள்ளலாம். ஒரு நாளைக்கு ரூ. 50,000 மேலாக வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டால், அரசு சமந்தபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்புள்ளது.
வீட்டுக்கு தேவையான ஏ.சி போன்ற அதிக விலை உள்ள பொருட்களை ரூ.2000 கொடுத்து மக்கள் வாங்கும் சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதுபோல சொமாட்டோவில் பணம் கொடுத்து ஆடர்களை பெரும் வாடிக்கையாளர், 72 சதவித்தனர் ரூ.2000 நோட்டுகளை கொடுத்துள்ளனர்.
சிறிய கடைகள் ரூ.2000 பெற்றுக்கொள்வதை மறுக்கின்றனர். மேலும் பெட்ரோல் நிலையங்களில் ரூ. 2000 நோட்டுகளின் வரவு, பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மும்பையில் உள்ள தங்க கடைகளில். வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்கும் சதவிகிதம் கடந்த 2 நாட்களில் அதிகரித்துள்ளது. வரும் சில வாரங்கள் வரை இது நீட்டிக்கும் என்று கூறப்படுகிறது.
இதுபோல ஹோட்டல்களில் தங்கும்போது அல்லது சாப்பிடும் நபர்கள், வழக்கமாக டெபிட் அல்லது கிரெடிட் கார்டைத்தான் கொடுப்பார்கள். ஆனால் தற்போது. ரூ. 2000 கொடுக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஹோட்டல் மற்றும் உணவங்களில் இந்த போக்கு செப்டம்பர் 30 வரை தொடரும் என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.