/tamil-ie/media/media_files/uploads/2019/06/template-2019-06-11T175348.818.jpg)
personal loan
வங்கிகள், தங்க கடன் (கோல்டு லோன்) மற்றும் தனிநபர் கடன் ஆகியவற்றுக்கு ஒரே அளவிலான வட்டிவிகிதத்தில் தான் கடன் வழங்குகிறது.
அத்துடன் தங்கம் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வேகமாகவும், வரம்புகள் ஏதுமின்றியும் கடன் பெற முடியும். அதே நேரம் தனிநபர் கடனில் தங்கம் போன்ற எதையும் நிபந்தனை அல்லது அடமானமாகப் பெறாமல் கடன் பெற முடியும். இந்தக் கடனை பெற ஒரு சில நாட்கள் அவகாசம் ஆகும்.
தங்க கடன் பெறுவது எப்படி?
பொதுவாக தங்க கடன் அதிகபட்சம் ரூ.1.5 கோடி வரை அளிக்கப்படும். உடனடியாக பணம் தேவைப்படும் நேரங்களில் தங்க கடனே எளிமையாக கிடைக்கும். தங்க கடன் வாங்கும் போது அதுவே உத்தரவாதம் என்பதால் கிரெடிட் ஸ்கோர் குறித்து கவலைப்பட தேவையில்லை. ஆனால், கடன் தொகை குறிப்பிட்ட அளவிற்கும் அதிகமாக இருந்தால் கிரெடிட் ஸ்கோர் கணக்கிடப்படும். தங்க நகை கடன் பெரும்பாலும் 3 வருடங்களுக்குள் செலுத்த வேண்டும்.
தங்க கடனுக்கு அடையாள மற்றும் முகவரி ஆவணத்தினை சமர்ப்பித்தால் போதும் . வட்டி விகிதம், மாத தவணை போன்றவற்றில் சில சலுகைகள் கிடைக்கும். தங்க நகை அடமான கடன் பெறும் போது தங்கத்தினை நேரடியாக வங்கியில் சமர்ப்பித்து அதன் மதிப்பினை கணக்கிட்ட பிறகே கடன் பெற முடியும். தங்க கடனை ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களின் தேவை கருதி உடன் வழங்குகின்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.