/tamil-ie/media/media_files/uploads/2019/03/slider-1-9.jpg)
bank holiday today
Banks holidays in April : நடப்பு நிதியாண்டுக்கான வங்கி கணக்குகள் முடிவடைவதையொட்டி ஏப்ரல் 1-ம் தேதி அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 31-ம் தேதி நடப்பு நிதியாண்டின் கடைசி நாள் ஆகும்.இதையொட்டி அனைத்து துறை நிறுவனங்களும் தங்களது வரவு செலவு கணக்கை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.இதற்கான பணியில் கடந்த 6 மாதங்கள் நிறுவனங்கள் மும்முரமாக செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில், வங்கி கணக்குகள் ஏப்ரல் 1 ஆம் தேதி நிறைவடைவதால் அன்றைய தினம் அனைத்து வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம்,நாளை (31.3.19) அனைத்து வங்கிகளும் வழக்கம்போல் செயல்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மேலும் இன்று (30.3.19) மற்றும் நாளை (31.3.19), ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 30-ம் தேதி இரவு 8 மணி வரையிலும், மார்ச் 31-ம் தேதி மாலை 6 மணி வரையிலும், வங்கிகளை திறந்து வைத்திருக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளையும், ரிசர்வ் வங்கி வலியுறுத்தியது.
ஏப்ரல 1 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று பொதுத்துறை, தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் செயல்படாது. அதேநேரத்தில், இணையதளம் மற்றும் தொலைபேசி கணக்குகள் வாயிலாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதில் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித சிக்கலும் இல்லை.
அதே நேரம் ஆர்பிஐ அலுவலகங்கள் அன்று செயல்படும். RTGS மற்றும் NEFT போன்றவற்றின் மூலம் பரிவர்த்தனைகளை செய்ய முடியாது. பெரும்பாலான தனியார் ஊழியர்களுக்கு 1 ஆம் தேதி சம்பள நாளாகும். வங்கியின் இந்த விடுமுறை அறிவிப்பால வழக்கம் போல் அவர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் வந்து சேருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.