வங்கிகள் மற்றும் கடன் கொடுக்கும் தனியார் நிறுவனங்கள் தற்போது டிஜிட்டல் செயலிகள் மூலம் கடன் பெறும் நிறுவனங்களுக்கு லோன் கொடுப்பதை நிறுத்தியுள்ளனர்.
டிஜிட்டல் செயலிகள் மூலம் கடன் தரும் கம்பேனிகளுக்கு இனி கடன் வழங்கப்போவதில்லை என்ற முடிவை வங்கிகளும், தனியார் கடன் வழங்கும் நிறுவனங்களும் முடிவு செய்துள்ளது. குறிப்பாக நாம் வங்கிகளில் கடன் வாங்கினால், மூன்றாம் நபரின் உத்தரவாதம் இருக்கும். இந்நிலையில் இதுபோன்று டிஜிட்டல் செயலிகளில் கொடுக்கப்படும் இன்ஸ்டண்ட் லோன் அதாவது உடனடியாக கடன் வழங்குகிறது. இந்நிலையில் இந்த மூன்றாம் நபர் உத்திரவாதம் இல்லாததால், இந்த செயலிகளுக்கு கடன் தருவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. கூடுதலாக இந்த செயலிகள் இப்போதுதான் ரிசர்வ் வங்கியின் கட்டுபாடுகளுக்குள் வந்துள்ளது.
மேலும் இது போல உடனடி கடன் தரும் செயலிகள் பணம் வசூலிக்கும் போது கடுமையாக நடந்து கொள்ளவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த புதிய கட்டுப்பாடு ஒரு சரியான முடிவு என்றும் இதுபோன்ற மூன்றாம் நபர் உத்தரவாதம் இல்லாமல் கடன் கொடுப்பதால் கடும் சிக்கல் ஏற்படலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் உடனடியாக லோன் வழங்கும் 99 செயலிகளை தடை செய்துள்ளது. இந்நிலையில் “ நாங்கள் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். ஆனால் இந்த FLDG விஷயத்தில் எது அனுமதிக்கப்படும் மற்றும் எது அனுமதிக்கப்படாது என்பதை ரிசர்வ் வங்கி தெளிப்படுத்த வேண்டும்” என்று டிஜிட்டல் கடன் வழங்கும் செயலிகள் ஒன்றின் நிறுவனர் தெரிவித்துள்ளார்.