3 ஆண்டு எஃப்.டி; 8% வரை வட்டி: 14 வங்கிகளின் லிஸ்ட் இதோ!
பந்தன் வங்கியானது மூன்று வருடங்கள் மற்றும் ஐந்து வருடங்களுக்குள் முதிர்ச்சியடையும் மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
Fixed Deposits |மூத்த குடிமக்கள் 3 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 8.1% வரை வட்டி விகிதத்தைப் பெறலாம். பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மூன்று ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இந்த ஃபிக்ஸட் டெபாசிட் விகிதங்கள் பொதுவாக ரூ.2 கோடிக்குக் குறைவான வைப்புகளுக்குப் பொருந்தும்.
Advertisment
அந்த வகையில், 3 வருட எஃப்.டி-களுக்கு அதிக வட்டி வழங்கும் 14 தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் பட்டியல் இதோ.
வங்கிகள்
வட்டி விகிதம் (%)
கனரா வங்கி
7.30%
கரூர் வைஸ்யா வங்கி
7.40%
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
7.50%
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
7.50%
பஞ்சாப் நேஷனல் வங்கி
7.50%
கோடக் மகிந்திரா வங்கி
7.60%
ஆக்ஸிஸ் வங்கி
7.60%
இண்டஸ்இந்த் வங்கி
7.75%
ஐ.டி.எஃப்.சி வங்கி
7.75%
பேங்க் ஆஃப் பரோடா
7.75%
பந்தன் வங்கி
7.75%
யெஸ் வங்கி
8.00%
ஆர்.பி.எல். வங்கி
8.00%
இந்தப் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
கனரா, பந்தன் வங்கி
பந்தன் வங்கியானது மூன்று வருடங்கள் மற்றும் ஐந்து வருடங்களுக்குள் முதிர்ச்சியடையும் மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதேநேரம், கனரா வங்கி மூன்று வருடங்கள் மற்றும் ஐந்து வருடங்களுக்குள் முதிர்ச்சியடையும் மூத்த குடிமக்களுக்கான எஃப்.டிகளுக்கு 7.3% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்
தொடர்ந்து, கரூர் வைஸ்யா வங்கி, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் முதல் மூன்று ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் மூத்த குடிமக்களுக்கு 7.4% வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஹெச்.டி.எஃப்.சி வங்கியை பொறுத்தமட்டில் இரண்டு ஆண்டுகள் 11 மாதங்கள் ஒரு நாள் முதல் மூன்று ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 7.5 சதவீதம் வட்டியை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“