scorecardresearch

மூன்றே ஆண்டுகளில் அதிக லாபம்; இந்த வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் ஸ்கீமை கவனியுங்க!

மூன்றே ஆண்டுகளில் உங்களது முதலீட்டு பணம் நல்ல லாபத்துடன் ரிட்டன் கிடைக்ககிறது. டெபாசிட் செய்வதற்கு முன்னர், எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி கிடைக்கிறது என்பதை இச்செய்தி தொகுப்பில் ஒப்பிட்டு பார்த்து தெரிஞ்சுக்கோங்க

மூன்றே ஆண்டுகளில் அதிக லாபம்; இந்த வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் ஸ்கீமை கவனியுங்க!

வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் (நிலையான வைப்புத் தொகை) திட்டத்தில் மூதலீடு செய்வது கையிருப்பாக உள்ள பணத்தை வேகமாக பெருக்கவதற்கு சிறந்த வழிகளில் ஒன்றாகும்.குறிப்பாக பங்குச்சந்தை பற்றிய அச்சம் இல்லாத, ரிஸ்க் இல்லாத ஒரு முதலீடாக பார்க்கப்படுகிறது.இதன் மூலம் குறைந்த காலத்திற்குள் உங்களது சேமிப்புப் பணத்தை இரட்டிப்பாக்கலாம். குறிப்பாக, மூன்றே ஆண்டுகளில் உங்களது முதலீட்டு பணம் நல்ல லாபத்துடன் ரிட்டன் கிடைக்ககிறது. டெபாசிட் செய்வதற்கு முன்னர், எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி கிடைக்கிறது என்பதை இச்செய்தி தொகுப்பில் ஒப்பிட்டு பார்த்து தெரிஞ்சுக்கோங்க

சூர்யோதயா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

இந்த வங்கி மூன்றாண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 7 சதவீதம் வட்டி வழங்குகிறது. சிறு நிதி நிறுவனங்களில், இந்த வங்கி சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது. 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மூன்று ஆண்டில் உங்களது பணம் 1.23 லட்சமாக அதிகரிக்கும். குறைந்தப்பட்ச ஃபிக்ஸட் தொகை ஆயிரம் ரூபாய் ஆகும்.

உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்

இந்த வங்கி மூன்றாண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 6.5 சதவீதம் வட்டி வழங்குகிறது.1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மூன்று ஆண்டில் உங்களது பணம் 1.21 லட்சமாக அதிகரிக்கும். இதிலும், குறைந்தப்பட்ச ஃபிக்ஸட் தொகை ஆயிரம் ரூபாய் ஆகும்.

ஆர்பிஎல் வங்கி

இந்த வங்கி மூன்றாண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 6.30 சதவீதம் வட்டி வழங்குகிறது. தனியார் வங்கிகளில், இந்த வங்கி சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது.1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மூன்று ஆண்டில் உங்களது பணம் 1.21 லட்சமாக அதிகரிக்கும்.

யெஸ் வங்கி

இந்த வங்கி மூன்றாண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 6.25 சதவீதம் வட்டி வழங்குகிறது. 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மூன்று ஆண்டில் உங்களது பணம் 1.20 லட்சமாக அதிகரிக்கும்.இதில், குறைந்தப்பட்ச ஃபிக்ஸட் தொகை 10 ஆயிரம் ரூபாய் ஆகும்.

6 சதவீதம் வட்டி

இண்டஸ்லேண்ட் வங்கி, AU ஸ்மால் பைனான்ஸ் வங்கி, ஈக்விட்டாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி ஆகியவை மூன்றாண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 6 சதவீதம் வட்டி வழங்குகிறது. இங்கு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மூன்று ஆண்டில் உங்களது பணம் 1.19 லட்சமாக அதிகரிக்கும்.

ஈக்விட்டாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் குறைந்தப்பட்ச ஃபிக்ஸ்ட் தொகை 10 ஆயிரம் ரூபாய் ஆகும். ஆனால், இண்டஸ் லேண்ட் மற்றும் AU ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளில் ஆயிரம் ரூபாய் தான்.

சிறிய தனியார் வங்கிகள் மற்றும் சிறு நிதி வங்கிகள் புதிய டெபாசிட்களை பெற அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) 5 லட்சம் வரையிலான நிலையான டெபாசிட் முதலீடுகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

FDகள் குறித்த தரவானது, 5 ஜனவரி 2022 அன்று, அந்தந்த வங்கி இணையதளங்களில் வெளியிட்டவை ஆகும். இந்த வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் அல்லாதவர்கள் மற்றும் 1 கோடி ரூபாய்க்கும் குறைவான வைப்புத் தொகைகள் கொண்டவர்களுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Banks offers upto 7 percent interest on 3 year fd schemes