/tamil-ie/media/media_files/uploads/2023/06/ls-money-2.jpg)
ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி 18 மாதங்கள் முதல் 21 மாதங்கள் வரையிலான வைப்புகளுக்கு 7.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
Fixed Deposits | ஃபிக்ஸட் டெபாசிட்கள் மூலதனப் பாதுகாப்பை விரும்பும் முதலீட்டாளர்களிடையே பிரபலமான உள்ளன. இவை குறைந்த ஆபத்துள்ள முதலீடுகளாகக் கருதப்படுகின்றன.
மேலும், குறிப்பிட்ட வங்கியில் ₹5 லட்சம் வரையிலான வைப்புத்தொகைக்கு காப்பீடு உள்ளது. அதாவது, வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன் லிமிடெட் (DICGC) மூலம் காப்பீடு செய்யப்படுகின்றன.
பொதுவாக, சிறந்த ஃபிக்ஸட் டெபாசிட் விகிதங்களை வழங்கும் வங்கிகள் பல்வேறு காரணிகள் மற்றும் நிலையான வைப்புத்தொகையின் குறிப்பிட்ட காலத்தைப் பொறுத்து மாறுபடும்.
அந்த வகையில், வங்கிகள் வழங்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
வங்கி பெயர் | வட்டி விகிதம் (%) | காலம் |
எஸ்பிஐ | 7% | 2-3 ஆண்டுகள் |
ஆக்ஸிஸ் வங்கி | 7.20% | 17-18 மாதங்கள் |
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி | 7.20% | 18 மாதம் முதல் 2 ஆண்டுகள் |
ஹெச்டிஎஃப்சி வங்கி | 7.25% | 18 மாதம்- 21 மாதங்கள் |
பேங்க் ஆஃப் பரோடா | 7.25% | 2 ஆண்டுக்கு மேல் |
பஞ்சாப் நேஷனல் வங்கி | 7.25% | 400 நாள்கள் |
கோடக் மகிந்திரா வங்கி | 7.40% | 391 நாள்கள்- 23 மாதங்கள் |
பஞ்சாப் சிந்த் வங்கி | 7.40% | 444 நாள்கள் |
யெஸ் வங்கி | 7.75% | 18-24 மாதங்கள் |
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி | 7.75% | 549 நாள்கள் 2 ஆண்டுகள் |
இண்டஸ்இந்த் வங்கி | 7.75% | 1 ஆண்டு 6 மாதங்கள் |
டிசிபி வங்கி | 8% | 25-26 மாதங்கள் |
ஆர்.பி.எல் வங்கி | 8.10% | 546 நாள்கள்-24 மாதங்கள் |
கோடக் மகிந்திரா வங்கி 390 நாள்கள் (12 மாதங்கள் 24 நாள்கள்) நீடிக்கும் டெபாசிட்டுகளுக்கு 7.40% வட்டி விகிதத்தையும், 391 நாள்கள் முதல் 23 மாதங்களுக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு 7.40% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. பஞ்சாப் & சிந்து வங்கி 444 நாள்கள் நீடிக்கும் டெபாசிட்டுகளுக்கு 7.40% வட்டி விகிதத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வட்டி விகிதங்கள் குறிப்பிட்ட காலங்களுக்கு மட்டும் பொருந்துகின்றன. முழுமையான தகவல்கள் வங்கி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளுக்கு சாதாரண குடிமக்களை விட மூத்தக் குடிமக்களுக்கு 0.50 சதவீதம் அதிகமான வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.