Advertisment

3 ஆண்டு எஃப்.டி.க்கு 8 சதவீதம் வட்டி: இந்த வங்கியை நோட் பண்ணுங்க

ஃபிக்ஸட் டெபாசிட் சேமிப்புகள் அவசரகால கார்பஸை உருவாக்க பயனுள்ளதாக இருக்கும். எனினும், வங்கி எஃப்.டி.க்கு (FD) வட்டிக்கு வரி விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

author-image
WebDesk
New Update
The Latest Fixed Deposit Interest Rates

பேங்க் ஆஃப் பரோடா மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட FDகளுக்கு 7.75 சதவீத வட்டி வழங்குகிறது.

ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்ய விரும்பும் மூத்த குடிமக்களுக்கு தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் நல்ல ரிட்டன் வழங்குகின்றன.
மேலும் ஃபிக்ஸட் டெபாசிட் சேமிப்புகள் அவசரகால கார்பஸை உருவாக்க பயனுள்ளதாக இருக்கும். எனினும், வங்கி எஃப்.டி.க்கு (FD) வட்டிக்கு வரி விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Advertisment

அந்த வகையில் பல்வேறு வங்கிகள் 3 ஆண்டுகள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 8 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன.

யெஸ் வங்கி

யெஸ் வங்கி மற்றும் இந்தஸ்இந்த் வங்கி தனது ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 8 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. அதாவது ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 3 ஆண்டுகளில் ரூ.1.27 லட்சமாக வளரும்.

பேங்க் ஆஃப் பரோடா

பேங்க் ஆஃப் பரோடா மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட FDகளுக்கு 7.75 சதவீத வட்டி வழங்குகிறது. பொதுத்துறை வங்கிகளில், இது சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது. முதலீடு செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மூன்று ஆண்டுகளில் ரூ.1.26 லட்சமாக வளரும்.

ஆக்ஸிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட FDகளுக்கு 7.60 சதவீத வட்டியை வழங்குகிறது. முதலீடு செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மூன்று ஆண்டுகளில் ரூ.1.25 லட்சமாக வளரும்.

ஹெச்.டி.எஃப்.சி வங்கி

ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட FD களுக்கு 7.50 சதவீத வட்டியை வழங்குகிறது. முதலீடு செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மூன்று ஆண்டுகளில் ரூ.1.25 லட்சமாக வளரும்.

கனரா வங்கி

கனரா வங்கி மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட FDகளுக்கு 7.30 சதவீத வட்டி வழங்குகிறது. முதலீடு செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மூன்று ஆண்டுகளில் ரூ.1.24 லட்சமாக வளரும்.

பெடரல் வங்கி

மூத்த குடிமக்களுக்கு ஃபெடரல் வங்கி மூன்று வருட FDகளுக்கு 7.10 சதவீத வட்டி வழங்குகிறது. முதலீடு செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மூன்று ஆண்டுகளில் ரூ.1.24 லட்சமாக வளரும்.

பேங்க் ஆஃப் இந்தியா மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட FDகளுக்கு 7.25 சதவீத வட்டி வழங்குகிறது. முதலீடு செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மூன்று ஆண்டுகளில் ரூ.1.24 லட்சமாக வளரும்.

பொதுவாக, ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) 5 லட்சம் வரையிலான நிலையான வைப்புகளில் முதலீடுகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment