இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை அட்டவணையின்படி, ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகள் 12 நாள்கள் மூடப்பட்டிருக்கும். இத்துடன் வார இறுதி நாள்கள் 6 விடுமுறையையும் சேர்த்தால் மொத்தம் 18 நாள்கள் வங்கி விடுமுறை நாள்கள் ஆகும்.
மேலும் இதில் சில விடுமுறைகள் பிராந்தியங்கள் மற்றும் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும். ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை தினம் ஆகும்.
அந்த வகையில் இந்திய ரிசர்வ் வங்கி பட்டியலிட்டுள்ள விடுமுறை தினங்கள் வருமாறு:-
ஆக.1 துரப தக்ஸி காங்டாங்
ஆக.8 மொஹரம் ஜம்மு, காஷ்மீர்
ஆக.9 மொஹரம் (சென்னை, அகர்தலா, அகமதாபாத், பெலாபூர், அய்ஸ்வால், பெங்களுரு, போபால், ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், டெல்லி, பாட்னா, ராய்ப்பூர் மற்றும் ராஞ்சி)
ஆக.11 ரக்ஷா பந்தன் (அகமதாபாத், போபால், டேராடூன், ஜெய்ப்பூர் மற்றும் சிம்லா)
ஆக.12 ரக்ஷா பந்தன் (கான்பூர் மற்றும் லக்னோ)
ஆக.13 தேசப் பக்தி தினம் (இம்பால்)
ஆக.15 சுதந்திர தினம் (நாடு தழுவிய தேசிய விடுமுறை)
ஆக.16 பார்சி புத்தாண்டு (பெலாபூர், மும்பை மற்றும் நாக்பூர்)
ஆக.18 கிருஷ்ண ஜென்மாஷ்டமி (புவனேஸ்வர், டேராடூன், கான்பூர் மற்றும் லக்னோ)
ஆக.19 ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி (அகமதாபாத், போபால், சண்டிகர், சென்னை, காங்டாக், ஜெய்ப்பூர், ஜம்மு, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங் மற்றும் சிம்லா)
ஆக.20 ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி (ஹைதராபாத்)
ஆக.29 விநாயகர் சதுர்த்தி (அகமதாபாத், பெலாபூர், பெங்களுரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர் மற்றும் பனாஜி)
வார விடுமுறை தினங்கள்
ஆக.7 முதல் ஞாயிறு
ஆக.13 இரண்டாம் சனிக்கிழமை மற்றும் தேசப்பக்தி தினம்
ஆக.14 இரண்டாம் ஞாயிறு
ஆக.21 மூன்றாம் ஞாயிறு
ஆக.27 நான்காம் சனிக்கிழமை
ஆக.28 நான்காம் ஞாயிறு
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“