இந்தாண்டு வருகின்ற ஜூலை மாதத்தில் மட்டுமே வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி 2023 ஜூலை மாதத்திற்கான வங்கிகள் விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு ஜூலை மாதம் மட்டும் மொத்தம் 15 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், ஏடிஎம், ஆன்லைன் பரிவர்த்தனைகள் வழக்கம் போல் எல்லா நாட்களும் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 2023 வங்கி விடுமுறை நாட்களின் முழு பட்டியல்:
ஜூலை 2, 2023: ஞாயிறு
ஜூலை 5, 2023: குரு ஹர்கோவிந்த் சிங் ஜெயந்தி - ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஜூலை 6, 2023: Mizo Hmeichhe Insuihkhawm Pawl (MHIP) நாள்- (மிசோரமில் வங்கிகள் மூடப்படும்)
ஜூலை 8, 2023: இரண்டாவது சனிக்கிழமை
ஜூலை 9, 2023: ஞாயிறு
ஜூலை 11, 2023: கேர் பூஜை - (திரிபுராவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)
ஜூலை 13, 2023: பானு ஜெயந்தி - (சிக்கிமில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)
ஜூலை 16, 2023: ஞாயிறு
ஜூலை 17, 2023: யு டிரோட் சிங் டே- (மேகாலயாவில் வங்கிகள் மூடப்படும்)
ஜூலை 21, 2023: Drukpa Tshe-zi - (சிக்கிமில் வங்கிகள் மூடப்படும்)
ஜூலை 22, நான்காவது சனிக்கிழமை
ஜூலை 23, 2023: ஞாயிறு
ஜூலை 28, 2023: அஷூரா - (ஜம்மு காஷ்மீரில் வங்கிகள் மூடப்படும்)
ஜூலை 29, 2023: முஹரம் பண்டிகை
ஜூலை 30, 2023: ஞாயிறு
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil