Old Pension Scheme Vs NPS: 2003ஆம் ஆண்டு, அப்போதைய மத்திய பாரதிய ஜனதா அரசால், பழைய ஒய்வூதிய திட்டம் நிறுத்தப்பட்டு, பதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது.
அப்போதைய பாரதிய ஜனதா அரசாங்கம் 2004 ஏப்.1ஆம் தேதி புதிய ஒய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தில் இருந்து ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாறிவிட்டன.
பொதுவாக பழைய மற்றும் புதிய இரண்டும் ஓய்வூதிய திட்டங்கள் ஆகும். எனினும் இந்தத் திட்டங்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை ஆகும்.
இதில் என்பிஎஸ் என்னும் புதிய ஓய்வூதிய திட்டம் முதலீட்டு ஓய்வூதிய திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதி பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுகிறது.
இதில் முதலீட்டாளர்களின் கடைசி கால வருமானத்துக்கு 100 சதவீதம் உத்ரவாதம் அளிக்காது. முதலீட்டாளர்களின் ரிஸ்க்-ஐ பொறுத்து வருமானத்தின் அளவில் கூடுதல், குறைவுகள் இருக்கலாம்.
பழைய ஓய்வூதிய திட்டத்துக்கும், புதிய ஓய்வூதிய திட்டத்தின் வேறுபாடுகள்
பழைய ஓய்வூதிய திட்டம்
- பழைய ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு நிலையான மாத வருமானத்தை உறுதியளிக்கிறது.
- கடைசியாக கொடுக்கப்பட்ட சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்கியது.
- ஊழியர்களுக்கு எந்த வரிச் சலுகைகளும் பொருந்தாது.
- பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருமானம் வரி விதிக்கப்படாது.
- ஓய்வு பெற்ற பிறகு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற அரசு ஊழியர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்.
புதிய ஓய்வூதிய திட்டம்
- புதிய ஓய்வூதிய திட்டத்தில் தனியார் துறை ஊழியர்களும் இணையலாம்.
- புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணியாள்கள் அல்லது தொழிலாளர்கள் தங்களது சம்பளத்தில் இருந்து பங்களிக்கிறார்கள். இந்தத் தொகை சந்தையுடன் இணைக்கப்பட்ட பங்குகளில் முதலீடு செய்யப்படும்.
- புதிய ஓய்வூதிய திட்டத்தில் ரூ.1.50 லட்சம் வரையிலான சேமிப்புக்கு வருமான வரிச் சட்டம் 80சி இன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும். அதேபோல் கூடுதலாக ரூ.50 ஆயிரம் ஆண்டு சேமிப்புக்கு 80சிசிடி பிரிவின் கீழ் வருவான வரி விலக்கு அளிக்கப்படும்.
- பணி ஓய்வுக்கு பிறகு ஊழியர் ஓய்வூதிய தொகையில் ஒரு பகுதியை மொத்தமாக பெறலாம். முதிர்ச்சியின் போது 60 சதவீதம் வரி விலக்கு அளிக்கப்படும். மீதமுள்ள 40 சதவீதம் வரிக்கு உட்பட்டது.
- ஜனவரி 1, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஆயுதப்படைகளைத் தவிர மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் கட்டாயம் பொருந்தும். மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை பின்பற்றுகின்றன.
- புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 10 வீதம் மாதாந்திர பங்களிப்பு செய்கிறார்கள். பொருத்தமான பங்களிப்பும் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. ஏப்ரல் 1, 2019 முதல், மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசின் பங்களிப்பு விகிதம் 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- புதிய ஓய்வதிய திட்டத்தில் 18 வயது முதல் 65 வயதுக்குள்பட்ட அனைத்து இந்திய குடிமகன்களும் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil