Advertisment

அடிப்படை சம்பளம் 10 ஆயிரமா… அப்போ 28 வருஷத்தில் கோடீஸ்வரர்; பிஎஃப் மாயாஜாலம்

பிஎஃப் கணக்கில் பென்ஷன் பிரிவுக்கு செலுத்தப்படும் பணத்திற்கு வட்டி கணக்கிடப்படாது

author-image
WebDesk
New Update
EPFO News: 22.55 கோடி பேருக்கு 8.5% வட்டிப் பணம்; உங்க அக்கவுண்டை செக் செய்தீர்களா?

நீங்கள் சம்பளம் வாங்கும் ஒரு ஊழியர் என்றால், உங்களது சம்பளத்தில் ஒரு பகுதி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (employees provident fund) என்ற இபிஎப் க்கு செல்லும். முழு பணம் கைக்கு வரவில்லை என ஆதங்கப்படும் ஊழியர்களுக்கான செய்திதான் இது. நீங்கள் சம்பளத்தில் பிஎஃப்காக அளிக்கும் சிறிய தொகை, பணி ஓய்வின்போது உங்களை கோடீஸ்வரராக மாற்றப்போகிறது என்பதை மறந்துவீடாதிர்கள்.

Advertisment

EPFO கோடிக்கணக்கான ஊழியர்களின் கணக்குகளை கையாள்கிறது. இந்த கணக்குகளில், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி 12 விழுக்காடும், நிறுவனம் வழங்கும் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி 12 விழுக்காடும் என மொத்தமாக 24 விழுக்காடு தொகை செலுத்தப்படுகிறது. இந்த தொகைக்கான வட்டிவிகிதத்தை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிர்ணயிக்கிறது. தற்சமயம், பிஎஃப் வட்டி தொகை 8.5 விழுக்காடு ஆகும். இந்த வட்டி விகித்ததால், நீங்கள் 25 ஆண்டில் கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பும் உள்ளது.

பென்ஷன் தொகைக்கு வட்டி இல்லை

சாதாரணமாக, பிஎஃப் கணக்கில் செலுத்தப்படும் மொத்த தொகைக்கும் வட்டி கிடைக்கும் என ஊழியர்கள் கருதுகிறார்கள். அது உண்மை இல்லை. பிஎஃப் கணக்கில் பென்ஷன் பிரிவுக்கு செலுத்தப்படும் பணத்திற்கு வட்டி கணக்கிடப்படாது. மேலே சொன்னதுபோல, 24 விழுக்காடு தொகைக்கு மட்டும் தான் வட்டி கணக்கிள் கொள்ளப்படும். ஆண்டுதோறும் வட்டி தொகை இணைக்கையில், உங்களுக்கு டபுள் லாபம் கிடைக்கும் என்பது தான் உண்மை.

அடிப்படை சம்பளம் 10 ஆயிரமா...ஓய்வு காலத்தில் ரூ.1.48 கோடி

EPF ஊழியர் வயது : 25
ஓய்வுதிய வயது: 58
அடிப்படை சம்பளம்: 10 ஆயிரம்
வட்டி வகிதிம்: 8.65%
ஊதியம் அதிகரிப்பு: ஆண்டிற்கு 10 விழுக்காடு
மொத்த தொகை: 1.48 கோடி

அடிப்படை சம்பளம் 15 ஆயிரமா...ஓய்வு காலத்தில் ரூ.2.32 கோடி

EPF ஊழியர் வயது : 25
ஓய்வுதிய வயது: 58
அடிப்படை சம்பளம்: 15 ஆயிரம்
வட்டி வகிதிம்: 8.65%
ஊதியம் அதிகரிப்பு: ஆண்டிற்கு 10 விழுக்காடு
மொத்த தொகை: 2.32 கோடி

பிஎப் வட்டி தொகை கணக்கீடு

பொதுவாக மத்திய அரசு பிஎப் வட்டி விகிதத்தை அறிவித்த உடன், EPFO அமைப்பு நடப்பு நிதியாண்டு முடியும் வரையில் காத்திருக்கும். நிதியாண்டு முடிந்த பின்பு ஒவ்வொரு கணக்கில் இருக்கும் இருப்பு தொகையை மாத வாரியாகக் கணக்கிட்டு மொத்த ஆண்டுக்கான வட்டியைத் தொகை டெப்பாசிட் செய்யும்.

கணக்கீடு உதாரணம்

இதன் படி 2020-21நிதியாண்டுக்கான வட்டி அளவை ஈபிஎப்ஓ அமைப்பு மாத வாரியான ரன்னிங் பேலென்ஸ் தொகையை X 8.5/1200 படி கணக்கிட்டு வட்டி தொகையை டெப்பாசிட் செய்யும்.

ஒருவர் தனது பிஎப் கணக்கில் இருந்து பணத்தை (final settlement) வித்டிரா செய்துவிட்டால், முந்தைய ஆண்டுக்கான வட்டி அளவில் கணக்கிடப்பட்டு டெப்பாசிட் செய்யப்படும்.

உதாரணத்திற்கு, உங்கள் பிஎஃப் கணக்கில் ஏப்ரல் மாதத்தில் மொத்தமாக 5,950 ரூபாய் செலுத்தப்படுகிறது என்றால், அந்த மாதத்தில் வட்டி கணக்கிடப்படாது. அடுத்ததால், மே மாத தொடக்கத்திலும் 5,950 ரூபாய் செலுத்தப்படும் பட்சத்தில், மே இறுதியில் வட்டி கணக்கில் கொள்ளப்படும்.

மொத்த தொகையான 11,900 X 8.5/1200 படி கணக்கிட்டால் வட்டி தொகையாக மாதம் 84.29 ரூபாய் கிடைக்கப்பெறும்.

உதாரணமாக உங்கள் கணக்கில் 1,00,000 ரூபாய் இருந்தால் 2020-21 நிதியாண்டுக்கு மத்திய அரசு உங்களுக்கு 708.3 ரூபாயை வட்டியாக டெப்பாசிட் செய்யும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Epfo Epfo Alert Tamil News Epfo Update Epfo Balance Check
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment