Bajaj Finance Fixed Deposits | இன்றைய காலகட்டத்தில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் அனைத்து வயதிலான முதலீட்டாளர்களாலும் பெரிதும் விரும்பப்படுகின்றன. இதற்கிடையில், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைத்திருப்பதால் சில வங்கிகள் எஃப்.டி வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளன.
அந்த வகையில் ஸ்மால் வங்கிகள், தனியார் வங்கிகள், பொதுத்துறை வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கியுள்ளன.
அதிலும் குறிப்பாக ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளுக்கு 9 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன. இதற்கிடையில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் நல்ல ரிட்டன் அளிக்கும் வகையில் வட்டி வழங்குகின்றன.
இதனுடன் போட்டியிடும் வகையில் பஜாஜ் வங்கி புதிய ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தப் புதிய வட்டி விகிதங்களின்படி சாதாரண பொதுமக்களின் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 8.35 சதவீதமும், மூத்தக் குடிமக்களுக்கு 8.60 சதவீதமும் வட்டி வழங்குகிறது.
மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ் உங்களின் நிலையான வைப்புத்தொகைக்கு 12 முதல் 60 மாதங்கள் வரையிலான பல்வேறு தவணைக்கால விருப்பங்களை வழங்குகிறது.
இதுமட்டுமின்றி திட்டத்தை வீட்டில் இருந்தே ஆன்லைனில் தொடங்கலாம். அதில் கால்குலேட்டர் ஒன்று இருக்கும். அதில் எத்தனை ஆண்டுகளில் என்ன வட்டி கிடைக்கும் என்பன போன்ற பல்வேறு தகவல்கள் உள்ளன.
தொடர்ந்து, பஜாஜ் ஃபைனான்ஸ் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திரம் உட்பட பல வட்டி செலுத்துதல் விருப்பங்களை வழங்குகிறது, இது உங்கள் விருப்பப்படி உங்கள் வட்டி வருவாயைப் பெற அனுமதிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“