இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய சேவைகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில், எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி YONO செயலியில் உள்ள Tax2Win வசதி மூலம் இலவசமாக வருமான வரித் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இச்சேவையில் வாடிக்கையாளர்களும் கூடுதல் நன்மைகள் கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வழியாக வருமான வரியை விரைவாக தாக்கல் செய்வதன் நன்மைகள்
- முன்கூட்டியே வருமான வரி தாக்கல் செய்து பல டிஸ்கவுண்ட்களை அள்ளுங்கள்
- முன்கூட்டியே வருமான வரி தாக்கல் செய்து முன்கூட்டியே பணத்தை திரும்ப பெறுங்கள்
- கடைசி நிமிட வரி தாக்கலை தவிர்த்திட முடியும்.
- ஏதேனும் பிழைகள் இருந்தால், திருத்துவதற்கான நேரம் கிடைத்திடும்
YONO செயலியில் இலவசமாக வருமான வரித் தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள்:
- பான் கார்டு
- ஆதார் கார்டு
- Form - 16
- வரி கழிப்பு விவரங்கள் (Tax deduction details)
- வட்டி வருமானச் சான்றிதழ்கள்
- வரி சேமிப்புக்கான முதலீட்டு ஆவணங்கள்
வழிசெலுத்துவோர் முதலில் Yono SBI பக்கத்திற்கு சென்று லாகின் செய்ய வேண்டும்.
தொடர்ந்து, Shop and Order-ஐ கிளிக் செய்து, Tax and Investment and Tax2Win ஆப்ஷனை கிளிக் செய்து தாக்கல் செய்து கொள்ளலாம்.
2020-21ஆம் ஆண்டுக்கான வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil