/indian-express-tamil/media/media_files/mtenOhZ0RELrRjVBJU1p.jpg)
Best Fixed Deposit interest rates | மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு சிறந்த வட்டி வழங்கும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் இங்குள்ளன.
மூத்த குடிமக்கள் பெரும்பாலும் தங்கள் பணத்தை குறைந்தபட்ச அபாயத்துடன் உத்தரவாதமான வருமானத்தை வழங்கும் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். வயதான நபர்களுக்கு பல்வேறு முதலீட்டு விருப்பங்கள் இருந்தாலும், அதிக வட்டி விகிதங்கள் மற்றும் அவை வழங்கும் ஸ்திரத்தன்மை காரணமாக நிலையான வைப்புத்தொகைகள் (FDகள்) ஒரு பிரபலமான தேர்வாகும்.
மேலும், மூத்த குடிமக்கள் பொதுவாக பொது மக்களுடன் ஒப்பிடும்போது ஃபிக்ஸட் டெபாசிட்களில் அதிக வட்டி விகிதங்களைப் பெறுகிறார்கள், பெரும்பாலான வங்கிகள் 0.50 சதவீதம் அதிக விகிதத்தை வழங்குகின்றன. கூடுதலாக, வருமான வரிச் சட்டத்தின் 80TTB பிரிவின் கீழ் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் உள்ள வைப்புத்தொகையிலிருந்து பெறப்படும் வட்டிக்கு அவர்கள் வரி விலக்கு பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
எனினும், ஒரு நிதியாண்டில் ரூ.50,000 வரையிலான வட்டி செலுத்துதலுக்கு TDS விலக்கு இல்லை. இந்நிலையில் ஃபிக்ஸட் டெபாசி்ட முதலீடுக்கு சிறந்த வட்டி விகிதங்கள் வழங்கும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
வ.எண் | ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் | அதிகப்பட்ச வட்டி (%) |
01 | ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 8.50% |
02 | ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 9.00% |
03 | ஈ.எஸ்.ஏ.எஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 8.75% |
04 | ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 8.75% |
05 | நார்த்ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 9.50% |
06 | சூர்யோடே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 9.10% |
07 | உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 8.75% |
08 | யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 9.50% |
09 | உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 9.10% |
ஜூலை 2024 மாதத்தில் அதிக வட்டி விகிதங்களை வழங்கும் மூத்த குடிமக்கள் நிலையான வைப்புகளின் பட்டியல் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.