/tamil-ie/media/media_files/uploads/2018/12/h9.jpg)
home loans
சொந்த வீடு.. பெரிய குடும்பம் தொடங்கி நடுத்தர குடும்பங்கள் வரை பலரின் கனவும் ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது தான். இதற்காக நாம் அனைவரும் முதலில் எடுக்கும் முயற்சி ஹோம் லோன். வங்கிகளில் ஹோம் லோன் வசதியை பயன்படுத்திக் கொண்டு ஒரு வீட்டை கட்டிவிட வேண்டும் என்றே பலரும் திட்டமிடுவார்கள்.
ஆனால், அதை எப்படி முறையாக செய்ய வேண்டும், வீட்டுக்கடனுக்கு எந்தெந்த வங்கிகளில் எவ்வளைவு வட்டி விகிதம் வசூலிப்பார்கள் போன்ற நடைமுறைகள் பலருக்கும் தெரிவதில்லை. அதிலும் வீட்டுக் கடனுக்கு பெஸ்ட் வங்கி எது என்ற தேடல் இப்போது வரை பலருக்கும் உள்ளது.
இதற்கு பதில் சொல்லும் விதமாக நாள்தோறும் ஹோம்லோன் வசதி குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று ஆக்சிஸ் வங்கி வழக்கும் வீட்டுக் கடன் வசதி குறித்து தெரிந்துக் கொள்வோம்.
ப்ளிஸ் படிங்க... பெர்சனல் லோன் வேண்டுமா?
ஆச்கிஸ் ஹோம்லோன்:
மலிவாகக் கிடைக்கக்கூடிய வீடுகளுக்கான கடன் அளவை அதிகரிக்க வேண்டும் என்று ஆக்சிஸ் வங்கிக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. நீங்கள் ரூ. 30 லட்சம் வரையிலான வீட்டுக்கடன் வாங்கத் திட்டமிட்டிருந்தால், ஆக்சிஸ் வங்கியின் சுப ஆரம்ப் (Shubh Aarambh) திட்டம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
வீட்டுக்கடன் வாங்குபவர் பணத்தைத் திரும்பச் செலுத்துவதில் தவறக்கூடாது. இந்தச் சலுகையில், இதர வங்கிகளின் வீட்டுக்கடன் வாடிக்கையாளர்களும் எந்தவிதமானக் கூடுதல் கட்டணங்களும் இல்லாமல் ஆக்சிஸ் வங்கியின் இந்தப் புதிய திட்டத்திற்கு மாறிக் கொள்ளலாம்.
இந்தப் பிரிவின் கீழ் வழங்கப்படும் வீட்டுக்கடனை கட்டுமானத்தின் கீழுள்ள கட்டடங்களுக்கும், குடிபுகத் தயாராக இருக்கும் கட்டடங்களுக்கும், மறுவிற்பனை வீடுகள் அத்துடன் சுய கட்டுமானம் அல்லது மனை மற்றும் அதன் கட்டுமானம் ஆகியவற்றிற்கு பெற்றுக் கொள்ளலாம்.
எஸ்பிஐ வழங்கும் 5 விதமான வட்டிக் கடன்கள்!
அப்புறம் என்ன? வீட்டுக் கடன் தேடலில் இருப்பவர்கள் உடனே புறப்படுங்கள் ஆக்சிஸ் வங்கிக்கு...!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.