ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு இவ்வளவு அதிக வட்டியா? இந்த 2 வங்கிகளை நோட் பண்ணுங்க!

Best interest rates for fixed deposits to these banks: இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் ஆர்.பி.எல் வங்கி ஆகியவை தங்கள் ஓராண்டு எஃப்.டி.களில் 6.5 சதவீத வட்டி விகிதங்களை வழங்குகின்றன. வெளிநாட்டு மற்றும் பொதுத்துறை வங்கிகள் வழங்குவதை ஒப்பிடும்போது இந்த வட்டி விகிதங்கள் அதிகம்.

Pension Scheme

COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலை நம்மை தாக்கி வரும் இந்த நேரத்தில், அவசர மருத்துவ தேவைகளுக்காக உங்கள் சேமிப்பின் ஒரு பகுதியை நிலையான வைப்புகளாக (Fixed Deposit) வைத்திருப்பது முக்கியம். ஃபிக்ஸ்ட் டெபாசிட்களில் முதலீடு செய்வதால் உங்கள் பணப்புழக்கம் அதிகரிக்கும். மேலும், தேவைப்படும்போது தொகையை திரும்பப் பெறலாம். உறுதியான வருவாய் மற்றும் பாதுகாப்பு காரணமாக ஆபத்து இல்லாத ஃபிக்ஸ்ட் டெபாசிட்களில் நீங்கள் முதலீடு செய்யலாம்.

வங்கி வட்டி விகிதங்கள் குறைவாக உள்ளதால், உங்கள் சேமிப்பின் ஒரு பகுதியை அதிக வருமானத்தைத் தரும் ஒரு வருட ஃபிக்ஸ்ட் டெபாசிட்களில் முதலீடு செய்யுங்கள். சிறிய தனியார் வங்கிகள் நிலையான வைப்புகளில் விகித அட்டவணையில் முதலிடம் வகிக்கின்றன. வைப்புத்தொகையைப் பெறுவதில் அவர்கள் எதிர்கொள்ளும் போட்டியைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் சிறிய தனியார் வங்கிகள் முன்னிலையில் உள்ளன. எவ்வாறாயினும், ஒரு வங்கியின் எஃப்.டி.களில் முதலீடு செய்வதற்கு முன்பு நீங்கள் வைப்புத் தொகையின் ஆபத்துகளை பற்றிய ஒரு முழுமையான மதிப்பீடு செய்தபின் முதலீடு செய்ய வேண்டும். வாருங்கள் எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி விகிதம் என்பதைப் பார்க்கலாம்.

இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் ஆர்.பி.எல் வங்கி ஆகியவை தங்கள் ஓராண்டு எஃப்.டி.களில் 6.5 சதவீத வட்டி விகிதங்களை வழங்குகின்றன. வெளிநாட்டு மற்றும் பொதுத்துறை வங்கிகள் வழங்குவதை ஒப்பிடும்போது இந்த வட்டி விகிதங்கள் அதிகம்.

வெளிநாட்டு வங்கிகளான ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி மற்றும் டிபிஎஸ் வங்கி ஒரு வருட எஃப்.டி.க்களில் வழங்கும் வட்டி விகிதங்கள் முறையே 5.30 சதவீதம் மற்றும் 4.25 சதவீதம்.

முன்னணி தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது சிறு நிதி வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் அதிகம். சூர்யோதை ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஒரு வருட எஃப்.டி.க்கு 6.75 சதவீத வட்டியையும், ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்றும் உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஆகியவை ஒரு வருட எஃப்.டி.களுக்கு 6.50 சதவீத வட்டியையும் வழங்குகின்றன.

முன்னணி தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி ஒரு வருட எஃப்.டி.களுக்கு 4.90 சதவீத வட்டியை வழங்குகின்றன. ஆக்சிஸ் வங்கி 5.15 சதவீத வட்டியை வழங்குகிறது. கோடக் மஹிந்திரா வங்கி ஒரு வருட வைப்புக்கு 4.50 சதவீத வட்டியை வழங்குகிறது, இது தனியார் வங்கிகளில் மிகக் குறைந்த விகிதமாகும்.

பொதுத்துறை வங்கிகளான யூனியன் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி மற்றும் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை ஒரு வருட எஃப்.டி.களுக்கு 5.25 சதவீத வட்டியை வழங்குகின்றன. பொதுத்துறை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) மற்றும் பாங்க் ஆப் பரோடா (பிஓபி) ஆகியவை முறையே 5 சதவீதம் மற்றும் 4.90 சதவீத வட்டியை தங்கள் ஓராண்டு எஃப்.டிக்கு வழங்குகின்றன.

ரூ .5 லட்சம் வரை நிலையான வைப்புகளில் முதலீடு செய்ய ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான டெபாசிட் காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் (டிஐசிஜிசி) உத்தரவாதம் அளிக்கிறது.

குறைந்தபட்ச முதலீட்டு தொகை வங்கிகளை பொறுத்து வேறுபடுகிறது. தனியார் வங்கிகளில், இந்த தொகை ரூ .100 முதல் ரூ .10,000 வரையிலும், வெளிநாட்டு வங்கிகளில் இந்த தொகை ரூ .1,000 முதல் ரூ .20,000 வரையிலும் இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Best interest rates for one year fixed deposit to these banks

Next Story
அவசரத்திற்கு உடனடி கடன்: போஸ்ட் ஆபீஸில் இந்த ஸ்கீம்களை செக் பண்ணுங்க!interest rate on ppf, ppf loan, loan against ppf, ppf, public provident fund, ppf account, ppf calculator
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com