Advertisment

2 மடங்கு பணம் கிடைக்கும்... பெஸ்ட் முதலீடு எதுன்னு பாருங்க!

Best investment options: பிபிஎஃப், சுகன்யா சமிர்தி யோஜனா, கேவிபி, என்ஸ்சி,என்பிஎஸ் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளின் கீழ் பணத்தை இரட்டிப்பாக்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
2 மடங்கு பணம் கிடைக்கும்... பெஸ்ட் முதலீடு எதுன்னு பாருங்க!

Double your investment: ஒவ்வொரு முதலீட்டாளர்களும் தங்களது பணத்தை குறுகிய காலத்தில் அதிகரிக்க நினைக்கிறார்கள். உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க தேவையான காலம் உங்கள் முதலீடுகளால் கிடைக்கும் லாபம் அல்லது வட்டி வீதத்தைப் பொறுத்தது. உங்கள் முதலீட்டில் அதிக வட்டி அல்லது லாபம் கிடைக்கும்போது உங்கள் பணம் வேகமாக இரட்டிப்பாகும். உங்கள் முதலீடு எத்தனை வருடத்தில் இரட்டிப்பாகும் என்பதை எளிதாகக் கணக்கிட "விதி 72" ஒன்று போதும். எவ்விதமான பெரிய கணக்கீடுகள் எதுவும் இல்லாமல் முதலீட்டுத் திட்டத்தின் வட்டி விகிதத்தை வைத்து மட்டும் , முதலீடு எத்தனை வருடத்தில் இரட்டிப்பாகும் என்பதைக் கணக்கிட முடியும். உதாரணமாக, நீங்கள் வங்கியில் வைத்திருக்கும் நிலையான வைப்புத் தொகைக்கு வங்கி 5 சதவீத வட்டி வழங்கினால் , உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க 14 ஆண்டுகள் ஆகும்.
விதி 72 பயன்படுத்திக் கணக்கிடும் போது ,72/ 5 (வட்டி விகிதம்) = 14.4 (தோராயமாக) ஆண்டுகள்

Advertisment

உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க விரும்பினால் உங்கள் முதலீடுகள் எவ்வளவு வருமானத்தை ஈட்ட வேண்டும்?

விதியை சிறிது மாற்றியமைப்பதன் மூலம், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கி தேவையான வருமானத்தை ஈட்டலாம்.
மூன்று ஆண்டுகளில் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க விரும்பினால், உங்கள் முதலீடுகள் ஒவ்வொரு ஆண்டும் 21% முதல் 24% (72/3 ஆண்டுகள்) வரை சம்பாதிக்க வேண்டும். இதேபோல், நீங்கள் ஐந்து ஆண்டுகளில் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க விரும்பினால், உங்கள் முதலீடுகள் ஆண்டுக்கு 14.4% (72/5) ஆக வளர வேண்டும்.10 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்த தொகையை இரட்டிப்பாக்குவதே உங்கள் குறிக்கோள் என்றால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7% சம்பாதிக்கும் வகையில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். பிபிஎஃப், சுகன்யா சமிர்தி யோஜனா, கேவிபி, என்ஸ்சி,என்பிஎஸ் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளின் கீழ் பணத்தை இரட்டிப்பாக்கலாம்

•பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யும்போது வட்டி விகிதம் 7.1% ஆக இருந்தால் 10 .14 வருடங்களில் உங்கள் முதலீடு இரட்டிப்பாகும்
•சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கு -7.6% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது, விதி 72ன் கீழ் 9.4 ஆண்டுகளில் உங்களது முதலீடு இரட்டிப்பாகும்.
•கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 6.9 சதவீத வட்டி கிடைக்கிறது. இதன்படிப் பார்த்தால் நீங்கள் முதலீடு செய்யும் தொகை 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாகி விடும்.
•தேசிய சேமிப்பு பத்திரத்தில் முதலீடு செய்வதன் மூலம் வட்டி விகிதம் 6.8% ஆக இருந்தால் 10.5 வருடங்களில் உங்கள் முதலீடு இரட்டிப்பாகும்.
•தேசிய ஓய்வூதிய திட்டம் சி,திட்டம் ஜி ஆகியவற்றில் டையர் 2 கணக்கில் ஒரு வருட காலத்தில் சராசரியாக 11.5% வருமானத்தை அளிக்கிறது. அதேபோல் 6.2 வருடங்களில் உங்கள் முதலீடு இரட்டிப்பாகும்.
•தற்போதைய காலகட்டத்தில் குறுகிய கால மியூச்சுவல் ஃபண்டுகள் சராசரியாக 8.5 % வரை லாபம் கொடுக்கின்றனர். ஆக இந்த முதலீடுகள் 8.4 ஆண்டுகளில் இரட்டிப்பாகலாம். நீண்டகால முதலீடுகள் 8.7 சதவீதம் வரை லாபம் கொடுக்கின்றனர். 8.3 வருடங்களில் உங்கள் பணம் இரட்டிப்பாகலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு பதிலாக, சிறுசேமிப்பு திட்டங்கள் நல்ல லாபகரமானதாக பார்க்கப்படுகிறது. எனினும் அரசின் இந்த சேமிப்பு திட்டங்களுக்கு வரி விகிதம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு அப்படியே இருக்கும் என தெரியவில்லை. அதனை பொறுத்து உங்களது முதலீடுகள் இரட்டிப்பாகும்.

Savings Scheme Best Investment Plan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment