பணக்காரர்களாக ஓய்வு பெற நினைப்பவர்கள் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என அவசியமில்லை. வித்தியாசமான முறையில் முதலீடு செய்தாலே போதும்.அதற்கான சரியான தேர்வு தேசிய ஓய்வூதிய திட்டம் . இது நம் நாட்டில் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிறந்த சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் சிறப்பே முறைசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் பயனளிக்கும் ஒரு திட்டமாகும்.
இந்த திட்டம் வயதானவர்கள் பொருளாதார பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய குடிமக்களுக்கு ஓய்வூதிய வருமானத்தை வழங்குவதை என்.பி.எஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது. 18 முதல் 60 வயதுக்குட்பட்ட இந்திய குடிமக்கள் மற்றும் என்.ஆர்.ஐ.க்கள் (வெளிநாடு வாழ் இந்தியர்கள்) இந்த திட்டத்தில் சேரலாம். இந்த திட்டத்தின் கீழ் பிரிவு 80 சிசிடி (1 பி) இன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகின்றது.
வரிச் சலுகைகள் என்ன?
“டயர் 1 திட்டத்தில் நிபந்தனைக்கு உட்பட்டு 80சிசிடி(1) பிரிவின் கீழ் நிதி ஆண்டில் ரூ. 1.5 லட்சம் வரிச் சலுகை கிடைக்கும். இதுபோக, 80 சிசிசிடி(1பி) பிரிவின்கீழ் ரூ.50,000 வரையிலான தொகைக்கு வரிச் சலுகை கிடைக்கும். அதாவது, என்.பி.எஸ் திட்டத்தில் செய்யப்படும் தொகைக்கு ஒருவர் அதிகபட்சம் நிதி ஆண்டில் ரூ.2 லட்சம் வரிச் சலுகை பெற முடியும். மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் டயர் 2 திட்டத்தில் செய்யப்பட்ட தொகைக்கு மூன்று ஆண்டுகள் லாக்இன் உடன் முதலீடு செய்த தொகைக்கும் வரிச் சலுகை கிடைக்கும்.
பயனாளருக்கு 60 வயது பூர்த்தியான பிறகு 60% பணத்தைத் திரும்பப் பெற முடியும். இந்தத் தொகைக்கு வரி கிடையாது. மீதி 40% தொகை காப்பீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டு மாதம்தோறும் பென்ஷன் வழங்கப்படும். இந்த பென்ஷன் வரிக்கு உட்பட்டது
ஓய்வூதிய திட்டம் என்பது ஒரு முதலீட்டாளரை பங்கு மற்றும் கடன் என இரண்டிலும் முதலீடு செய்ய வழிவகை செய்கிறது. ஏனென்றால் எம்.என்.பி.எஸ் கணக்கு வைத்திருக்கும் நபர் கடன் கணக்கு மற்றும் பங்கு கணக்கு என இரண்டு வகை கணக்குகளை பெறுகிறார்.என்.பி.எஸ் முதலீட்டு விதிகளின் படி ஒருவர் 75 சதவீதம் வரை பங்குகளில் முதலீடு செய்ய முடியும்
அதாவது 25 சதவீதம் என்.பி.எஸ் கடன் கணக்கில் முதலீடு செய்தாக வேண்டும்.வரி மற்றும் முதலீட்டு நிபுணர்கள் சொல்வதன் படி பார்த்தால், ஒருவரின் என்.பி.எஸ் பங்களிப்பில் மிக உயர்ந்த ஈக்விட்டி விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும், ஏனென்றால் முதலீடு நீண்ட காலத்திற்கானதாக இருக்க வேண்டும்.நீண்ட காலத்திற்கு ஒருவர் ஈக்விட்டிக்கு குறைந்தபட்சம் 12 சதவீத வருவாயை எதிர்பார்க்கலாம். அதே சமயம் கடன் 8 சதவீதத்தை கொடுக்கும் என்கிறார்கள்.
என்.பி.எஸ் கணக்கில் 75:25 ஈக்விட்டி கடன் விகிதத்தின் பயன் குறித்து பேசிய முதலீட்டு நிபுணர் ஜிதேந்திர சோலங்கி, ஒருவர் 75 சதவீத பங்கு மற்றும் 25 சதவீத கடனை தேர்வு செய்யும் பட்சத்தில், அவரது பணம் என்.பி.எஸ் கணக்கில் 11 சதவீதமாக வளரும்.
முதலீடு செய்யம் போது தேர்வு செய்ய வேண்டிய உத்தி என்ன?
துணிகர முதலீட்டில் ஆர்வம் உள்ளவர் என்றால், அத்தகைய முதலீட்டாளர்கள் ஈக்விட்டியை அதிக வெளிப்பாடாகவும்,கடன் வெளிப்பாட்டை குறைந்த மட்டத்திலும் வைத்திருக்க வேண்டும்.
என்.பி.எஸ் வங்கி கணக்கில் 75:25 ஈக்விட்டி கடன் விகித அடிப்படையில் மாதத்திற்கு 6000ரூபாயை 30 ஆண்டுகள் முதலீடு செய்தால்,மொத்த பணத்தில் 11 சதவீதத்தை வருவாயாக பெறமுடியும். என்.பி.எஸ் கால்குலேட்டரை பயன்படுத்தி , முதலீட்டாளர் 30 ஆண்டுகளுக்கு பிறகு 40 சதவீதத்தை வாங்கினால், திரும்பப்பெறும் தொகை என்பது 1.01,88,821 ஆகவும், 40 சதவீத வருடாந்திர என்.பி.எஸ் திட்ட பயனாளிக்கு 33,963 ரூபாயை மாத ஓய்வுதியமாக பெற முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.