New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/03/SBI-13.jpg)
Business news in tamil best investment options for younger generation investors
Business news in tamil best investment options for younger generation investors
Business news in tamil: ஒரு இளம் முதலீட்டாளராக இருப்பதன் மிகப் பெரிய நன்மை என்னவென்றால், விரும்பிய நிறுவனத்தில் முதலீடுகளை செய்து அதிக வருமானத்தை ஈட்ட முடியும். அதோடு உங்களது சொத்து ஒதுக்கீடு திட்டம் அனுமதித்தால், நீங்கள் முதலீடுகளை அதிகரிக்க இது ஒரு நல்ல நேரம்.
இளம் வயதிலேயே உங்களை ஈக்விட்டி போர்ட்ஃபோலியோவில் சேர்த்து கொள்வது உங்களுக்கான வளர்ச்சி வாய்ப்புகளை அதிகரிக்கும். மற்றும் எதிர்காலத்தில் நல்ல வருவாயைப் பெறுவதற்கான வாய்ப்புகளை உண்டாக்கும். மேலும் உங்ககளின் நீண்ட கால முதலீடுகளும், சிறிய அளவு முதலீடுகளும் அதிக வருவாயை ஈட்ட உதவும்.
நீங்கள் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? அவற்றை எங்கே முதலீடு செய்யலாம்?
இளம் வயதில் நீங்கள் முதலீடு செய்த ஒவ்வொரு பைசாவிலும் அதிக வருமானத்தை விரும்பும் போது, ஒரு பெரிய தொகையை முதலீடு செய்வது உங்களுக்கு கடினம். அதிக வருவாய் ஈட்டுவதற்கு ஈக்விட்டி பங்குகளில் முதலீடு செய்யலாம். ஆனால் அதில் அதிக வருமானத்திற்கு சமமாக அதிக ஆபத்துகள் உள்ளது.
பங்கு முதலீடுகளை இரண்டு வழிகளில் செய்யலாம். பங்குகளை நேரடியாக வாங்குவது அல்லது பரஸ்பர நிதிகள் வழியாக வாங்குவது. பங்குகளை நேரடியாக வாங்குவதற்கு நிறைய நிபுணத்துவம் வேண்டும். மற்றும் பங்குகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதற்கு கண்டிப்பாக உங்களுக்கு அதிக நேரம் எடுக்கும்.
மியூச்சுவல் ஃபண்டுகளின் விஷயத்தில், ஒரு நிதி மேலாளரால் அவை கவனித்துக் கொள்ளபடுகின்றன. ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் சிறந்த முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாக உள்ளது. ஏனெனில் அவை நிதி மேலாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. அவர்கள் பங்குகள் வாங்குதல், விற்றல் மற்றும் வைத்திருத்தல் போன்றவைகள் குறித்த சரியான முடிவை எடுப்பார்கள். கூடுதலாக, நீண்ட காலத்திற்கு முறையான முதலீட்டு திட்டங்கள் (எஸ்ஐபிக்கள்) வழியாக, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது உங்களுடைய வெற்றிக்கு முக்கியமான ஒன்றாக அமையும். ஏனெனில் முதலீட்டாளர்கள் ரூபாய், செலவு, சராசரி மற்றும் அளவின் நன்மைகளைப் பெறுகிறார்கள்.
பரிவர்த்தனை-வர்த்தக மியூச்சுவல் ஃபண்டில் (ப.ப.வ.நிதி) மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யவதன் மூலம் செலவுகளை குறைக்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டோடு பரிவர்த்தனை-வர்த்தக மியூச்சுவல் ஃபண்ட்டை ஒப்பிடுகையில் பரிவர்த்தனை நிதி செலவு குறைவாக இருக்கும்.
ஆபத்து எதிர்மறையா? உங்கள் போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்துங்கள்!
ஈக்விட்டி முதலீடுகள் சில நேரங்களில் ஆபத்தை ஏற்படுத்தும் வண்ணம் அமைகின்றன. மேலும் நீங்கள் அதிக ஆபத்து இல்லாதவர்களாக இருந்தால், அதற்கேற்ப உங்கள் போர்ட்ஃபோலியோவை சமப்படுத்த முயற்சி செய்து பார்க்கலாம். பத்திரங்கள், கடன் பரஸ்பர நிதிகள் போன்ற நிலையான வருமான தருபவற்றில் முதலீடு செய்வதன் மூலமும், போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்துவதன் மூலமும் இதைச் செய்யலாம். கடன் நிதிகள் நிலையான வருமான பத்திரங்களில் கில்ட் ஃபண்ட் முதல் குறுகிய கால திட்டங்கள் (எஸ்.டி.பி), சில்லறை நிதிகள் மற்றும் மாத வருமான திட்டங்கள் (எம்ஐபிக்கள்) வரையிலான முதலீட்டு விருப்பங்களுடன் முதலீடு செய்யப்படுகின்றன.
மேலும், ஒருவர் குறியீட்டு நிதிகளிலும் அல்லது நீல சிப் பங்குகளிலும் முதலீடு செய்யலாம். குறியீட்டு நிதிகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 போன்ற பிரபலமான பங்குச் சந்தை குறியீட்டைக் கண்காணிக்கும் ஒரு சிறப்பு வகையான பரஸ்பர நிதிகள் ஆகும். இந்த நிதிகள் அடிப்படைக் குறியீட்டைக் கொண்டிருக்கும். அந்த பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம், அது கண்காணிக்கும் குறியீட்டின் செயல்திறனைப் பின்பற்றலாம். ப்ளூ சிப் பங்குகள் வலுவான மற்றும் நிலையான வருவாய் விகிதங்களைக் கொண்டுள்ளன. மேலும் சந்தை அசைவுகளால் அவை அதிகம் பாதிக்கப்படாததால் சந்தை நிலையற்றதாகத் தோன்றும் போது நிலைத்தன்மையை வழங்குகின்றன.
இளம் வயதிலேயே முதலீடுகள் செய்வது எதிர்கால நிதி இலக்குகளால் ஈர்க்கப்படுகின்றன. இது கார் வாங்குவது, வீடு வாங்குவது போன்ற ஒரு முதலீடாக இருக்கலாம். உங்கள் செல்வத்தை ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக உயர்த்த நீங்கள் முதலீடு செய்ய நினைக்கும் போது,
சில முதலீடுகளில் உள்ள நிச்சயமற்ற தன்மை குறித்து அறிந்து கொள்ள வேண்டும். ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்வது அவசியம். அதிலும் முக்கியமாக நீண்ட கால காப்பீட்டு திட்டத்தில் முதலீடுகளை செய்யலாம். அவை உங்களுடைய காலத்திற்கு பிறகு, உங்களுடைய அன்பிற்குரியவர்களுக்கு உதவும்.
சுருக்கமாக
பலவகையான முதலீட்டு விருப்பங்கள் கிடைப்பதால், ஒவ்வொரு முதலீடும் சிறப்பாக நிர்வகிக்கப்பட வேண்டும். எனவே, ஒருவர் எப்போதும் பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோவை உருவாக்கி, அதை அவர்களால் அல்லது ஒரு பிரத்யேக முதலீட்டு ஆலோசகரின் உதவியுடன் தீவிரமாக நிர்வகிக்க வேண்டும். மேலும், அதிக வருவாய் கிடைக்கும் என்பதற்காக, அதிக முதலீட்டில் ஈடுபட வேண்டாம். உங்கள் தற்போதைய சொத்து ஒதுக்கீடு உங்களுக்கு போதுமானதாக இருந்தால் மட்டும் அதிக முதலீட்டில் ஈடுபடுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.