பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும் LICயின் திட்டங்கள் பாதுகாப்பானதாகவும் சிறந்ததாகவும் கருதப்படுகிறது.
எல்.ஐ.சி. ஜீவன் லாப் என்பது இந்தியாவின் ஆயுள் காப்பீட்டு கழகம் அளிக்கும் ஆயுள் காப்பீடு திட்டங்களில் ஒன்றாகும். இது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளுடன் சேவையாற்றுவதற்காக என்டௌமெண்ட் திட்டத்துடன் இணைக்கப்படாமல் வெளி வரும் வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும் திட்டமாகும். பாதுகாப்பு மற்றும் சேமிப்பு இரண்டையும் இணைந்து வழங்குகிறது. 8-59 வயதுக்குள் இருக்கும் மக்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ள முடியும்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
இந்த திட்டத்தில் மூன்று பிளான்கள் உள்ளன, ஒன்று 16 வருட பாலிசியாகும். இந்த பாலிசியில் நீங்கள் 10 வருடம் பணம் கட்டினால் போதும். இதே இரண்டாவது திட்டம் 21 பாலிசி காலமாகும். இந்த பாலிசியில் 15 வருடம் நீங்கள் பிரீமியம் செலுத்தினால் போதுமானது. மூன்றாவது 25 வருட பாலிசி காலம் கொண்ட திட்டத்தில், 16 வருடம் பிரீமியம் செலுத்தினால் போதுமானது.
இந்த பாலிசியில் பங்கு சந்தை அபாயங்கள் கிடையாது. பாலிசி காலம் முதிர்வு வரை பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்தை திட்டமிடுவதற்கான சிறந்த பாலிசியாகவும் பார்க்கப்படுகிறது. இதனுடன் ரைடர்ஸ் பாலிசிகளையும் பெற்றுக் கொள்ளும் அம்சம் உண்டு. இந்த பாலிசியினை பொறுத்தவரையில் குறைந்தபட்சம் 2 லட்சம் காப்பீடாகும். அதிகபட்ச வரம்பு என எதுவும் இல்லை.
வருடாந்திர பிரீமியத்திற்கு 2% மற்றும் அரை வருட பிரீமியத்திற்கு கட்டணங்களின் மீது 1% தள்ளுபடியை வழங்குகிறது. மேலும், உறுதியளிக்கப்பட்ட தொகையானது ரூபாய் 5 லட்சத்திலிருந்து 9.9 லட்சம் வரைக்கும் இருக்கும் போது 1.25% தள்ளுபடியை வழங்குகிறது. உறுதியளிக்கப்பட்ட தொகையானது ரூபாய். 10 லட்சத்திலிருந்து ரூபாய். 14 லட்சம் வரைக்கும் இருந்தால் 1.50% தள்ளுபடியை வழங்குகிறது. உறுதியளிக்கப்பட்ட தொகை 15 லட்சம் மற்றும் அதற்கு மேலே இருந்தால் 1.75% தள்ளுபடியை வழங்குகிறது.
வரி விலக்கு
இந்த பாலிசியில் 80சி கீழ் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. முதிர்வு தொகைக்கு 10 (10டி)யின் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. பாலிசி முடிவதற்குள் வாடிக்கையாளர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்திற்கு நிதி உதவி கிடைக்கும்.