பிள்ளைகளின் வருங்காலத்திற்கு பணம் சேர்க்க மிகச் சிறந்த திட்டம் எது தெரியுமா?

சிறந்த ஒரு முதலீடு திட்டமாக உள்ளது.

இன்றைய சேமிப்பு நாளைய முதலீடு என்பார்கள். ஆனால் பிள்ளைகளுக்கான இன்றைய சேமிப்பு நாளைக்கு அவர்களின் வருங்காலம் என்பதே சரி. பிள்ளைகளின் கல்வி செலவு, திருமண செலவு என்று எண்ணி கவலையடையும் பெற்றோர்களா நீங்கள்?

உங்களுக்காக இந்த சிறப்பு பகிர்வு. எந்தெந்த திட்டத்தில் சேமித்தால் நாளை உங்கள் பிள்ளைகளின் வருங்கால சிறப்பாக இருக்கும் என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.

மியூச்சுவல் ஃப்ண்டு:

குழந்தைகள்லின் கல்வி செலவிற்காக மியூச்சுவல் ஃபண்டு வழியாக முதலீடு செய்வது நல்ல பயனை அளிக்கும். மியூச்சுவல் ஃபண்டில் எஸ்ஐபி மூலமாக மாத தவணையில் முதலீட்டினை தொடங்கலாம்.மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யும் போது வருமான வரிச் சட்டப்பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் பெற முடியும்.

ஷேர் மார்க்கெட்:

நேரடி பங்கு சந்தையில் முதலீடு செய்வதன் மூலமும் அதிக லாபத்தினை அடைய முடியும். 5 வருடங்களுக்குப் பிறகு நல்ல லாபம் வேண்டும் என்று தெரிவிப்பார்கள் அதற்கு ஏற்றப் பங்கு எது என்று திட்டமிட்டு முதலீட்டினை தொடங்க வேண்டும். இதுவே குறைந்த காலத்தில் அதிக லாபம் வேண்டும் என்றால் ரிஸ்க் இருக்கும். நீண்ட காலத்திற்குப் பிறகு குழந்தைகளின் படிப்பிற்காகச் செலவு செய்ய விரும்புபவர்கள் நேரடி பங்கு சந்தை முதலீட்டினை செய்யலாம்.

தெரிந்துக் கொள்ளுங்கள்… எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு வழக்கும் அல்டிமேட் திட்டங்கள் என்னென்ன?

வங்கி திட்டங்கள்:

தேசிய சேமிப்புப் பத்திரம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட திட்டங்களும் குழந்தைகளின் கல்விக்கு ரிஸ்க் இல்லாமல் சேமிக்க உதவு திட்டங்கள் ஆகும். இந்தத் திட்டங்களில் மூலம் முதலீடு செய்யும் போது ஒவ்வொரு காலாண்டிற்கும் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டாலும் சிறந்த ஒரு முதலீடு திட்டமாக உள்ளது.

மேற்கண்ட 3 திட்டங்களை தவிர பல திட்டங்கள் குழந்தைகளின் சேமிப்பு திட்டங்களாகவே செயல்படுகிறது. அதைப் பற்றி வரும் காலங்களில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையதளத்தில் உள்ள வணிக செய்திகள் பக்கத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

பல முறை அலைந்தும் வங்கியில் ஹோம் லோன் கிடைக்கலையா? இதுதான் காரணம்!

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close