பணத்தை செலவு பண்றதுக்கு ஆயிரம் வழிகள் இருக்கு ? ஆனா பணம் சேமிக்க ? நீங்கள் மாதம் குறைந்தபட்சம் 1000 ரூபாய் உங்கள் மாத சம்பளத்திலிருந்து சேமிக்க வேண்டுமா ? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே இரண்டே வித்தியாசம் தான் .பணக்காரர்களுக்கு எப்படி பணத்தை சேமிக்க வேண்டும் மற்றும் எப்படி உபயோகமாக செலவு செய்ய வேண்டும் என்று தெரியும்.
நெட் பேங்கில் IMPS வசதி மூலம் அடிக்கடி பணம் அனுப்புபவரா நீங்கள்? இதை படியுங்கள்!
ஆனால் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த பலருக்கு பணத்தை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் கட்டாயம் இருக்கும். ஆனால் எப்படி என்பதில் தான் குழப்பம் . அந்த குழப்பமே வேண்டாம்.இதோ உங்கள் பணத்தை எளிதாக சேமிக்க மிகச் சிற்ந்த வழிகள்.
தபால் அலுவலகத்தில் முதலீடு செய்வது என்பது மிகவும் நம்பிக்கைக்கு உரியது. அஞ்சல் அலுவலகங்களில் 9 சேமிப்புத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இத்திட்டங்களில் சேமிப்பு கணக்கை வைத்திருப்பது மற்றும் முதலீடு செய்வதன் மூலம் குறைந்தது 4 சதவீதத்தில் இருந்து அதிகபட்சம் 8.10 சதவீதம் வரை லாபம் பெறலாம்.
தபால் அலுவலக சேமிப்பு கணக்கு:
தபால் அலுவலக சேமிப்பு கணக்கு என்பது வங்கிகளில் உள்ள சேமிப்பு கணக்கைப் போன்றதே. இந்தக் கணக்கை துவங்கக் குறைந்தபட்சம் 20 ரூபாய் கணக்கில் வைப்புத் தொகையாக இருக்க வேண்டும். தனிநபர் மற்றும் கூட்டு கணக்குகளாகவும் இந்தக் கணக்கை திறந்து கொள்ளலாம்.
இந்தக் கணக்கில் சேமிக்கும் தொகைக்கு வருடத்திற்கு 4 சதவீதம் வரை லாபம் உண்டு. 500 ரூபாய் குறைந்தபட்ச வைப்புத் தொகையாக வைத்து கணக்கை துவங்குபவர்களுக்கு செக் புக் அம்சமும் அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் 10,000 ரூபாய் வரையிலான லாபத்திற்கு 2012-2013 நிதி ஆண்டு முதல் வருமான வரி செலுத்த தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு:
தபால் அலுவலக நேர வைப்பு கணக்கில் குறைந்தது 200 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு வட்டி காலாண்டு வாரியாக கணக்கிடப்பட்டு ஆண்டிற்கு ஒருமுறை வழங்கப்படும்.
1 வருடம் முதலீடு செய்பவர்களுக்கு 7.1 சதவீத லாபமும், 2 வருடம் வரை முதலீடு செய்பவர்களுக்கு 7.2 சதவீதம் வரை லாபமும், 3 வருடம் வரை முதலீடு செய்பவர்களுக்கு 7.4 சதவீதம் வரை லாபமும், 5 வருடம் வரை முதலீடு செய்பவர்களுக்கு 7.9 சதவீதம் வரை வட்டியும் லாபமாகப் பெறலாம்.
வருங்கால வைப்பு நிதி கணக்கு:
தபால் அலுவலகத்தில் உள்ள அனைத்து சேமிப்பு கணக்கையும் ஒப்பிடுகையில் இதுவே அதிக லாபம் அளிக்கக் கூடிய திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் மாதத்திற்குக் குறைந்தது பட்சம் 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். வருடத்திற்கு அதிகபட்சம் 1,50,000 ரூபாய் வரையிலும் முதலீடு செய்யலாம்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்தால் முதிர்ச்சி காலம் முன்பே திரும்பிப் பெறும் வசதி கிடையாது. இத்திட்டம் மூலம் பெறும் லாபத்திற்கு வரி ஏதும் கிடையாது. அதுமட்டும் இல்லாமல் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்து வரும் போது கடன் பெறும் வசதியும் உண்டு.
தேசிய சேமிப்பு பத்திரம்:
அஞ்சல் துறையில் உள்ள பல சேமிப்புத் திட்டங்களைப் போன்று தேசிய சேமிப்பு பத்திர திட்டமும் ஒன்று. இந்தத் திட்டத்தில் வங்கிகளை விடச் சிறிது அதிகமான வட்டியைப் பெறலாம்.
பொதுத் துறை வங்கிகளை விடக் குறைந்தது 0.5 சதவீதம் அதிக வட்டியை இத்திட்டத்தில் பெறலாம். 8.1 சதவீதம் வரை லாபம் அளிக்கும் இத்திட்டத்திலும் வருமான வரியில் இருந்து வரி விலக்கைப் பெறலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்:
இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் போது 8.6 சதவீதம் வரை வட்டி விகிதம் பெறலாம். அதுமட்டும் இல்லாமல் இத்திட்டத்திற்கும் வருமான வரியில் இருந்து வரி விலக்கைப் பெறலாம்.
கிசான் விக்காஸ் பத்ரா:
கிசான் விக்காஸ் பத்ரா திட்டத்தில் வருமான வரி விலக்கு இல்லாததால் பெரும்பாலம் யாரும் இத்திட்டத்தை விரும்புவதில்லை. ஆனால் இத்திட்டத்தில் 110 மாதங்கள் அதாவது 9 வருடம் 2 மாதங்கள் வரை முதலீடு செய்திருந்தால் முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் அளிக்கும்.