/indian-express-tamil/media/media_files/2025/09/06/best-sip-mutual-funds-2025-09-06-11-26-22.jpg)
Best Mutual Funds
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகள் ஒரு பொற்காலம் என்று சொல்லலாம். பங்குச் சந்தையின் எழுச்சி, பல ஃபண்டுகளை இருமடங்கு, மும்மடங்கு லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளன. குறிப்பாக, ஐந்தே ஆண்டுகளில் 30% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை (CAGR) கொடுத்த ஒன்பது மியூச்சுவல் ஃபண்டுகள், முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. உங்கள் முதலீட்டுப் பட்டியலில் இவை இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வோம்.
கடந்த 5 ஆண்டுகளில் அதிரடி லாபம் கொடுத்த ஃபண்டுகள்:
அதிசயிக்க வைக்கும் இந்த லாபத்தை கொடுத்த ஃபண்டுகளில் பெரும்பாலானவை, ஸ்மால் கேப் மற்றும் மிட்கேப் பிரிவைச் சேர்ந்தவை. இந்த ஃபண்டுகள் ரிஸ்க் அதிகம் என்றாலும், லாபத்தில் எந்த குறையும் வைக்கவில்லை.
குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் (Quant Small Cap Fund): இந்த ஃபண்ட், ஐந்து வருடங்களில் சுமார் 34.63% வருடாந்திர வளர்ச்சி விகிதத்தைக் (CAGR) கொடுத்து பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட் (Motilal Oswal Midcap Fund): மிட்கேப் பிரிவில் அசத்தியுள்ள இந்த ஃபண்ட், 33.89% CAGR லாபத்தை அளித்துள்ளது.
நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் (Nippon India Small Cap Fund): நிப்பான் இந்தியா நிறுவனத்தின் இந்த ஸ்மால் கேப் ஃபண்ட், 32.92% வருடாந்திர வளர்ச்சி விகிதம் கொடுத்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பந்தன் ஸ்மால் கேப் ஃபண்ட் (Bandhan Small Cap Fund): ஸ்மால் கேப் பிரிவில் மற்றொரு ஜாம்பவான், பந்தன் ஃபண்ட் 31.39% வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை அளித்துள்ளது.
எச்.டி.எஃப்.சி ஸ்மால் கேப் ஃபண்ட் (HDFC Small Cap Fund): நிதித்துறையில் வலுவான பெயரைக் கொண்ட எச்.டி.எஃப்.சி ஃபண்ட், 30.97% CAGR லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளது.
ஹெச்.எஸ்.பி.சி ஸ்மால் கேப் ஃபண்ட் (HSBC Small Cap Fund): சர்வதேச அளவில் பிரபலமான ஹெச்.எஸ்.பி.சி நிறுவனம், 30.55% வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
இன்வெஸ்கோ இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் (Invesco India Smallcap Fund): இந்த ஃபண்ட் 30.41% வருடாந்திர வளர்ச்சி விகிதத்தைக் கொடுத்துள்ளது.
டாடா ஸ்மால் கேப் ஃபண்ட் (Tata Small Cap Fund): டாடா குழுமத்தின் இந்த ஃபண்ட் 30.18% வருடாந்திர வளர்ச்சி விகித லாபத்துடன் முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்குரியதாக உள்ளது.
நிப்பான் இந்தியா மல்டி கேப் ஃபண்ட் (Nippon India Multi Cap Fund): ஸ்மால் கேப் மட்டுமல்லாமல், நிப்பான் இந்தியாவின் மல்டி கேப் ஃபண்டும் 30.12% வருடாந்திர வளர்ச்சி விகிதத்தைக் கொடுத்துள்ளது.
மற்ற ஃபண்டுகளின் நிலை என்ன?
மேற்கூறிய ஒன்பது ஃபண்டுகள் தவிர, கடந்த ஐந்து ஆண்டுகளில் 204 ஃபண்டுகள் 13.17% முதல் 29.86% வரை வருடாந்திர வளர்ச்சி விகிதத்தைக் கொடுத்துள்ளன. இதில் ஃபிராங்க்ளின் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் 29.85% லாபத்தையும், மோதிலால் ஓஸ்வால் ஃபோகஸ்டு ஃபண்ட் 13.17% லாபத்தையும் அளித்துள்ளன.
முதலீட்டாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை!
இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் கடந்த கால செயல்திறன் மட்டுமே. எதிர்காலத்திலும் இதே லாபத்தை அவை கொடுக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் முன், உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறன், முதலீட்டு இலக்குகள் மற்றும் ஃபண்டின் நிதி மேலாண்மை போன்றவற்றைக் கருத்தில் கொள்வது அவசியம். லாபம் அதிகம் உள்ள ஃபண்டுகளைத் தேர்ந்தெடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் உங்கள் முதலீடுகளை அவ்வப்போது மதிப்பாய்வு செய்வதும் முக்கியம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us