Equity Linked Savings Scheme (ELSS): ELSS என்றால் ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம். எளிமையாகச் சொன்னால், இது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஆகும், இது உங்களுக்கு செல்வ உருவாக்கம் மற்றும் வரிச் சலுகைகளின் இரட்டை நன்மைகளை வழங்குகிறது.
மேலும், இது முதன்மையாக ஈக்விட்டியில் முதலீடு செய்கிறது மற்றும் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு பெற தகுதியுடையது. தற்போது நாம் கடந்த 3 ஆண்டுகளில் 35 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்த 5 திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
1) குவாண்ட் வரி திட்டம்
2) பந்தன் டேக்ஸ் அட்வான்டேஜ்
3) டிஎஸ்பி டேக்ஸ் சேவர் பண்ட்
4) பேங்க் ஆஃப் இந்தியா டேக்ஸ் சேவர் அட்வான்டேஜ் பண்ட்
5) பிஜிஐஎம் இந்தியா டேக்ஸ் சேவர் பண்ட்
1) குவாண்ட் வரி திட்டம்
இந்தத் திட்டத்தின் நிகர மதிப்பு ரூ.4,605.78 கோடி ஆகும். இது கடந்த 3 மாதத்தில் 10.76 சதவீதம் ரிட்டனும், 6 மாதத்தில் 25.57 சதவீத ரிட்டனும், ஓராண்டில் 15.48 சதவீத ரிட்டனும், 3 ஆண்டுகளில் 34.90 சதவீதம் ரிட்டனும் வழங்கியுள்ளது.
2) பந்தன் டேக்ஸ் அட்வான்டேஜ்
இந்தத் திட்டத்தின் நிகர மதிப்பு ரூ.5,073.13 கோடி ஆகும். இது கடந்த 3 ஆண்டுகளில் 31.34 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளது.
3) டிஎஸ்பி டேக்ஸ் சேவர் பண்ட்
இதன் நிகர மதிப்பு ரூ.11,862.57 கோடி ஆகும். இது கடந்த 3 ஆண்டுகளில் 26.96 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளது. கடந்த 3 மாதத்தில் மட்டும் இதன் ரிட்டன் 9.47 சதவீதம் ஆகும்.
4) பேங்க் ஆஃப் இந்தியா டேக்ஸ் சேவர் அட்வான்டேஜ் பண்ட்
இதன் நிகர மதிப்பு ரூ.843.13 கோடி ஆகும். இது கடந்த 3 மாதத்தில் 11.65 சதவீதம் ரிட்டனும், கடந்த 3 ஆண்டுகளில் 26.32 சதவீதம் ரிட்டனும் கொடுத்துள்ளது.
5) பிஜிஐஎம் இந்தியா டேக்ஸ் சேவர் பண்ட்
இதன் நிகர மதிப்பு ரூ.560.07 கோடி ஆகும். இது கடந்த 6 மாதத்தில் 3.9 சதவீதமும், 6 மாதத்தில் 16.2 சதவீதமும், ஓராண்டில் 17.94 சதவீதமும், 3 ஆண்டுகளில் 25.89 சதவீதமும் ரிட்டன் கொடுத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“