Advertisment

மாதம் ரூ.1 லட்சம் பென்ஷன் வேண்டுமா? அரசின் இந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்!

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அனுமதி பெற்ற மையங்கள், பெரும்பாலான வங்கிகள் மற்றும் சில நிதி நிறுவனங்களில் என்பிஎஸ் முதலீட்டைத் தொடங்க முடியும்.

author-image
WebDesk
New Update
மாதம் ரூ.1 லட்சம் பென்ஷன் வேண்டுமா? அரசின் இந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்!

பென்ஷன் திட்டங்களில் முன்கூடியே முதலீட்டினை தொடங்கும் போது அதிக லாபத்தினைப் பெற முடியும். என்பிஎஸ் என அழைக்கப்படும் தேசிய பென்ஷன் திட்டம் ஒரு விருப்ப ஒய்வூதிய திட்டமாகும். பிபிஎஃப் போன்று இந்த திட்டத்தில் யார் வேண்டுமானாலும் தங்களது முதலீட்டை செய்ய முடியும். முதலீட்டாளர்களுக்கு 60 வயதான பிறகு முதிர்வு தொகையை பென்ஷனாக பெறலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு வரி விலக்கும் கிடைக்கும்.

Advertisment

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அனுமதி பெற்ற மையங்கள், பெரும்பாலான வங்கிகள் மற்றும் சில நிதி நிறுவனங்களில் என்பிஎஸ் முதலீட்டைத் தொடங்க முடியும்.

இந்த என்பிஎஸ் திட்டத்தில் சமீபத்தில் அரசு பல புதிய மாற்றங்களை செய்தது. அவற்றில் முக்கியமானது எஸ்பிஎஸ் சந்தாதாரர் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மட்டுமே முழு கார்பஸினையும் பெற முடியும். இதற்கு முன்னர் பென்ஷனை முழுவதும் ஒரே நேரத்தில் பெற முடியாது. இதில் 60% மட்டுமே திரும்ப பெற முடியும். 40% நீங்கள் வருடாந்திர திட்டத்தில் வைக்க வேண்டும். இதன் மூலம் மாத மாதம் உங்களுக்கு ஒரு வருமானமாக கிடைக்கும்.

அரசின் ஒந்த ஓய்வூதிய திட்டத்தில் வரிச்சலுகையும் கிடைக்கும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும்போது, முன்பு பணவீக்கம் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைய 1000 ரூபாய் என்பது 30 ஆண்டுகள் கழித்து எவ்வளவாக இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு, எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு 30 வயதான ஒருவர் என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்து, அவருக்கு, 60 வயதாகும்போது, 1 லட்சம் பென்ஷன் பெற எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்று இங்கு பார்ப்போம்.

என்பிஎஸ் திட்டத்தில் மாதம் 17,000 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம், 30 ஆண்டுகளுக்கு பிறகு 61,20,000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். இதன் மூலம் முதிர்வு தொகை 3,87,48,531 ரூபாயாகும். இதில் நீங்கள் ஓய்வுக்காக 50% வைத்துக் கொண்டால் கூட, உங்களால், இதன் மூலம் மாதம் சுமார் (annuity rate 7% என வைத்துக் கொண்டால்) 1,13,017 லட்சம் ரூபாய் பென்ஷனாக பெற முடியும்.

இதே 30 ஆண்டுகாலத்திற்கு மாதம் 1000 ரூபாய் செலுத்தியிருந்தீர்கள் என்றாலும் கூட, உங்களுக்கு மாதம் ஓய்வூதிய தொகையாக மாதம் 5,698 ரூபாய் கிடைக்கும். நீங்கள் மொத்தம் 3,60,000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். இதன் மூலம் உங்களது மொத்த கார்ப்பஸ் 22,79,326 ரூபாயாகும். இதிலும் 50% வருடாந்திர திட்டத்தில் (annuity rate 7%) வைத்துக் கொண்டால் இந்த தொகை ஓய்வூதியமாக கிடைக்கும்.

ஓய்வூதிய திட்ட முதலீட்டிலிருந்து ஒரு பகுதியை அவசரகால நிதியாக பெறுவது சாத்தியம் என்றாலும், ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து, மூன்றாண்டுகள் கழித்தே அவசரகால நிதியை பெறமுடியும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Retirement Plan National Pension Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment