scorecardresearch

தினமும் 74 ரூபாய் சேமித்து வைத்தால் நீங்களும் கோடீஸ்வரர் தான்… உறுதியளிக்கும் என்.பி.எஸ் திட்டம்!

National Pension System: என்பிஎஸ் திட்டத்தில் தினமும் ரூ.74 சேமித்தால் ஓய்வுகாலத்தில் ரூ.1கோடி வரை கிடைக்கும்.

தினமும் 74 ரூபாய் சேமித்து வைத்தால் நீங்களும் கோடீஸ்வரர் தான்… உறுதியளிக்கும் என்.பி.எஸ் திட்டம்!

ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கையை நடத்துவதற்கு நிலையான ஒரு தொகை தேவைப்படும். இதற்கு பென்சன் அல்லது முதலீட்டுத் தொகை உதவியாக இருக்கும். நாம் முன்கூட்டியே திட்டமிட்டு பெரியத்தொகையை சேமித்து வைக்க வேண்டும். அதற்கான சிறந்த திட்டம்தான் தேசிய ஓய்வூதிய திட்டம். இத்திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாகும். தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் 8 முதல் 10 சதவீதம் வரையில் வட்டி லாபம் கிடைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் வருமான வரிச் சட்டம் 80சியின் கீழ் வரிச்சலுகை வழங்கப்படுகிறது.

என்பிஎஸ் திட்டத்தில் தினமும் ரூ.74 சேமித்தால் ஓய்வுகாலத்தில் ரூ.1கோடி வரை கிடைக்கும்.

தினமும் ரூ.74 என மாதத்துக்கு ரூ.2,230 சேமித்தால் 40 ஆண்டுகளில் உங்களுக்கு ரூ.1 கோடி வரையில் கிடைக்கும். உங்களது 20 வயதில் நீங்கள் இத்திட்டத்தில் இணைந்து சேமிக்கத் தொடங்கினால் 60ஆவது வயதில் இச்சலுகையை நீங்கள் பெறமுடியும்.

மாதம் உங்களுக்கு ரூ.27,500 பென்சன் கிடைக்கும். 9 சதவீத வட்டியில் இத்தொகை உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் சேமித்த தொகை ரூ.10.7 லட்சம். வட்டி மூலமாக உங்களுக்குக் கிடைக்கும் தொகை ரூ.92.4லட்சமாகும்.

என்பிஎஸ் திட்டம் பிபிஎஃப் மற்றும் இபிஎஃப் திட்டங்களை விட சிறந்தது. மேலும், தேசிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து உங்களது ஓய்வூதியத் தொகையின் ஒரு பகுதியை, முறையான காரணங்களுக்காக பெற்றுக் கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Best retirement plan national pension system benefits