வேலை செய்பவர்கள் ஒரு நாள் ஓய்வு பெற்றுத்தான் ஆக வேண்டும். ஆனால் ஓய்வு காலங்களிலும் நமக்கு ஒரு நிலையான வருமானம் வேண்டும். அப்போதுதான் நமது அன்றாட தேவைகளை சமாளிக்க முடியும். இதற்கு உங்களிடம் சிறந்த ஓய்வூதிய திட்டங்கள் இப்போதே இருக்க வேண்டும். மேலும், உங்கள் ஓய்வூதியத்திற்காக எவ்வளவு சேமிக்கிறீர்கள் என்பதைக் கணக்கிடும்போது பணவீக்கத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என நிதித் திட்டமிடுபவர்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறார்கள்.
நீங்கள் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படுகிறது என்பது உங்கள் ஓய்வு காலத்தில் உங்களுடைய செலவுகள் மற்றும் முக்கிய வாழ்க்கை நிகழ்வுகளைப் பொறுத்தது. உங்கள் சராசரி மாதச் செலவு இப்போது ரூ .65,000 ஆக இருந்தால், 25 ஆண்டுகளில் ரூ. 321,890.80 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம், இது ஏற்றுக்கொள்ளத்தக்க வருடாந்திர பணவீக்க வீதமான 6% ஐ அடிப்படையாக கொண்டதாகும்.
உங்கள் திருமணத்திற்கு பிறகான வாழ்க்கையில், நிறைய முக்கிய நிகழ்வுகள் நடக்கும், அதற்காக உங்களது சேமிப்பு கரையலாம். எனவே உங்கள் ஓய்வுகாலத்தை நிலையான வருமானத்துடன் நிம்மதியாக கழிக்க சிறந்த ஒய்வூதிய திட்டங்களை நாடுவது நல்லது.
ஓய்வூதிய காலங்களில் சிறந்த பலன்களை அளிப்பதாக, பொது வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் உள்ளன. அதுவும் நீங்கள் ஒரு வருடத்திற்கு ரூ.1,50,000 க்கு மேல் சேமிக்க முயலும் போது பொது வருங்கால நிதி கணக்கு உங்களுக்கு அதிகப்படியான நம்பிக்கையை தருகிறது.
தற்போதைய வருவாய் விகிதத்தில், ஆண்டுக்கு ரூ .150,000 அல்லது மாதத்திற்கு ரூ .12,500 முதலீடு செய்தால் 15 ஆண்டுகளின் முடிவில் உங்களுக்கு ரூ .40,68,209 கிடைக்கும். இந்த தொகையை மேலும் 15 ஆண்டுகளுக்கு மீண்டும் முதலீடு செய்தால், அது ரூ .1.99 கோடியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைனில் இலவசமாகக் கிடைக்கும் ஏராளமான பிபிஎஃப் கால்குலேட்டர்களைக் கொண்டு இந்த கணக்கீடுகளை நீங்கள் சரிபார்க்கலாம்.
மாதாந்திர செலவினங்களுக்கு வருகையில், உங்கள் தற்போதைய செலவு ரூ .65,000 என்பது அடுத்த 30 ஆண்டுகளில் ரூ. 321,890.80 ஆக இருக்கும். உங்களுக்கு தற்போது 30 வயது என கருத்தில் கொண்டு அடுத்த 30 ஆண்டுகளில் நீங்கள் ஓய்வு பெற உள்ளீர்கள் எனக் கொண்டால், உங்கள் 30 வருட பி.எஃப் சேமிப்பு அடுத்த நான்கு ஆண்டுகளுக்குக்கூட போதுமானதாக இருக்காது. பிபிஎஃப்க்கு பிரிவு 80 சி இன் கீழ் வருமான வரி விலக்கு கிடைக்கும்.
சிறந்த சேமிப்பு திட்டமான பிபிஎஃப் உங்கள் நிதி இலாகாவில் கட்டாயமாக இருக்க வேண்டும் என்றாலும், நீண்ட கால சேமிப்புத் திட்டம் என்று வரும்போது பங்கு நிதிகளையும் கவனத்தில் கொள்வது முக்கியம்.
நீண்டகால ஈக்விட்டி ஃபண்டுகள் வரலாற்று ரீதியாக கடந்த 10 ஆண்டுகளில் 11.92% வருமானத்தை அளித்துள்ளன என்று சிறந்த ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. பெரிய மற்றும் நடுத்தர வகை ஈக்விட்டி ஃப்ண்டுகள் இதே காலகட்டத்தில் 14.32% வருமானத்தை அளிக்கின்றன. இப்போது இதை PFF இன் 7.1% வருமானத்துடன் ஒப்பிட்டு பார்த்து உங்களுக்கு சரி எனப்படுவதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
இருப்பினும், இங்கே கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன: பிபிஎஃப் கடன் ஒதுக்கீட்டோடு ஒப்பிடும்போது பங்கு முதலீடுகள் ஆபத்தானவை, எனவே முதலீடு செய்யும் முன் யோசித்து செயல்பட வேண்டும். ஆபத்தை விரும்பாதவர்களுக்கு பிபிஎஃப் தான் சிறந்தது. மேலும், ஓய்வுக்குப் பிறகு உங்கள் செலவினம் இப்போதை விட கணிசமாகக் குறைவாக இருக்கும், எனவே பெரும்பாலும் உங்கள் செலவுகளும் கணிசமாகக் குறைவாக இருக்கும். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் ஈக்விட்டி நீண்ட காலத்திட்டங்கள் 11.9% வழங்கியிருந்தாலும், அடுத்த 10 ஆண்டுகளில் இது அப்படியே இருக்கும் என்று அர்த்தமல்ல என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil