Advertisment

கூடுதல் பயன் கிடைக்கும் மூத்த குடிமக்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டங்கள்!

Senior Citizen Savings Scheme: எஸ்.பி.ஐ.யின் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி கிடைக்கிறது.

author-image
WebDesk
New Update
loan

Best savings scheme for senior citizens: சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல மிகச் சிறிய தொகையை நீங்கள் இப்போது சேமிக்கத் தொடங்கினாலே உங்களது ஓய்வு காலத்தில் மிகப் பெரிய தொகையை ஈட்டிவிட முடியும். நம்முடைய இளமைக்காலம் முழுவதும் கஷ்டப்பட்டுச் சேமித்த நிதியை மிகவும் பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும். பாதுகாப்பு அம்சத்தைக் கணக்கில் கொள்ளும் பொழுது அதிலிருந்து கிடைக்கும் வருவாயும் மிகக் குறைவாக இருக்கும். மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் அவர்களுக்குப் பல்வேறு நன்மைகளை வழங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் இப்பொழுது இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டங்களைப் பற்றிப் பார்ப்போம்..

Advertisment

எஸ்.பி.ஐ. யின் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்

60 வயதை அடைந்த தனிநபர்கள் எவரும் இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு புதிய கணக்கைத் திறக்க இயலும். இந்தக் கணக்கை திறக்கப் படிவம் ஏ வை பூர்த்திச் செய்து அதனுடன் கணக்கு துவங்கும் ஒரு விண்ணப்பப் படிவம் மற்றும் 60 வயதை பூர்த்தி செய்ததற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் பொழுது ரூ.1000 அல்லது அதனுடைய மடங்காகப் பணத்தை வைப்பு நிதியாகச் செலுத்த வேண்டும்.

ஒருவருடைய வயது 60க்கு குறைவாகவும் 55 வயதிற்கு அதிகமாகவும் இருந்தாலும் அவரால் இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கை தொடங்க இயலும். எனினும் அவர் விருப்ப ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

ஒரு நபர் இந்தத் திட்டத்தின் கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்கை திறக்க இயலும். எனினும் இந்தத் திட்டங்களில் செய்யப்படும் மொத்த முதலீடு ரூ .15 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வட்டி விகிதங்கள்

இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படும் கணக்கிற்கு ஆண்டுக்கு 7.4 சதவிகித வட்டி வழங்கப்படுகின்றது. வட்டி ஒவ்வொரு காலாண்டின் இறுதியில் அதாவது மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30 மற்றும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31, தேதிகளில் வழங்கப்படுகின்றது.

முதிர்வு

கணக்குத் திறந்த தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் முடிந்தபின், எழுத்து மூலமான விண்ணப்பத்துடன் சேர்த்து, கணக்குப் புத்தகம், படிவம் ஈ ஆகியவற்றைச் சமர்ப்பித்து முதிர்வு தொகையைத் திரும்பப் பெறலாம்.

ஐசிஐசிஐ வங்கியின் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்

பிற வங்கிகளில் இந்தத் திட்டத்திற்கு வழங்கப்படும் அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் இந்தக் கணக்கிற்கும் பொருந்தும். கணக்குத் தொடங்கிய காலத்தில் இருந்து ஒரு வருடம் கழித்து ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பணத்தைத் திரும்ப எடுத்தால், நீங்கள் செலுத்திய வைப்பு நிதியின் மதிப்பில் சுமார் ஒன்றரை சதவீதம் அபராதமாக விதிக்கப்படும்.

வட்டி விகிதம்:

இந்தக் கணக்கிற்குச் சுமார் 7.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. எனினும் இந்த வட்டி விகிதம் அரசாங்கத்தின் நிர்ணயக் கொள்கையைப் பொறுத்து வருடந்தோறும் மாறுபடும். இந்த வங்கிக் கணக்கில் வழங்கப்படும் வட்டிக்கு TDS பொருந்தும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் இந்தக் கணக்கை விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம் நீட்டிப்புச் செய்யலாம்.

தபால் அலுவலகத்தின் மூத்த குடிமக்களுக்கான வைப்புத் திட்டம்

வங்கிகளைப் போன்ற அஞ்சல் நிலையமும் மூத்த குடிமக்களுக்கான இந்தத் திட்டத்தை வழங்குகின்றன. 55 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மற்றும் 60 வயதிற்கும் குறைவான வயதுக்குட்பட்ட தனிநபர்கள் தாங்கள் ஓய்வு பெற்ற ஒரு மாதத்திற்குள் இந்தக் கணக்கை தொடங்க வேண்டும். எனினும் இந்தக் கணக்கில் செலுத்தப்படும் தொகையானது அந்த நபரின் ஓய்வூதிய பலன்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வட்டி விகிதங்கள்

தற்போது, இந்தச் சேமிப்புக் கணக்கிற்குச் சுமார் 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகின்றது.

முதிர்வு

ஒரு ஆண்டிற்கு முன்னர் வைப்புத் தொகையைத் திரும்ப எடுக்க வேண்டுமெனில், மொத்த வைப்புத் தொகையின் மதிப்பில் சுமார் 1.5 சதவீதம் அபராதமாகச் செலுத்த வேண்டும். அதுவே 2 ஆண்டுகளுக்குப் பிறகு வைப்பு நிதியைத் திரும்ப எடுக்க நினைத்தால் 1 சதவீத அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Sbi Savings Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment