இன்றைய கொரோனா சூழலில் பணத்தேவை அதிகரித்துள்ள நிலையில், நாம் பாதுகாப்பாக முதலீடு செய்து சேமிக்க வேண்டியது அவசியமாகிறது. திட்டமிட்டு முதலீடு செய்தால் அதிகபட்ச வருவாய் கிடைக்கும். அதற்கு சிறந்த தேர்வு தபால் அலுவலகத்தின் சிறு சேமிப்பு திட்டம்தான். முதலீட்டுக்கு பங்கம் இல்லாமல் வட்டியும் கிடைக்கும். அதில் சிறந்த திட்டம் தேசிய சேமிப்பு பத்திரம்(National savings certificate)தான். வங்கிகளின் பிக்ஸட் டெபாசிட்டை விட இந்த திட்டத்திற்கு வட்டி அதிகமாக வழங்கப்படுகிறது.
தேசிய சேமிப்பு பத்திரம்
அனைத்து இந்திய குடிமக்களும் இத்திட்டத்தில் முதலீடு செய்ய தகுதியுள்ளவர். குறைந்தபட்ச முதலீடு ரூ.100, அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு ஏதும் இல்லை. ரூ.100-க்களின் மடங்குகளில் பத்திரங்களை வாங்கலாம். ரூ.500, ரூ.1000, ரூ.5000, ரூ.10000 போன்ற மதிப்புகளிலும் சேமிப்பு பத்திரங்களை வாங்கலாம். தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர், அதற்கான வரி சலுகையையும் வருமான வரிச்சட்டம் 80சி பிரிவின் கீழ் சலுகை பெறமுடியும். இதன் முதர்வு காலம் 5ஆண்டுகள் ஆகும்.
வட்டி விகிதம்
இத்திட்டத்தில் ஆண்டுக்கு 6.8 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. ஆனால் வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிலும் மத்திய நிதி அமைச்சகத்தால் திருத்தப்படலாம். ஒருவர் ரூ.15லட்சத்தை முதலீடு செய்தால் அவருக்கு 5 ஆண்டுகள் முடிவில் 20.85 லட்சம் வருவாய் கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"