2022 டிசம்பரில் விற்பனை சரிவை சந்தித்த ஸ்விஃப்ட்.. முதலிடம் எது தெரியுமா?

2022 டிசம்பரில் விற்பனையான முதல் 3 மாருதி சுஸுகி கார்களின் விற்பனை விவரங்கள் இதோ.

2022 டிசம்பரில் விற்பனையான முதல் 3 மாருதி சுஸுகி கார்களின் விற்பனை விவரங்கள் இதோ.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
best-selling Maruti Suzuki cars in December 2022

மாருதி சுசுகி எர்டிகா

2022 டிசம்பரில் மாருதி சுசூகியின் சிறந்த விற்பனையான கார்கள் பட்டியலில் ஆல்டோ, வேகன் ஆர் உள்ளிட்ட கார்கள் உள்ளன. இந்த 3 கார்களின் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

Advertisment

மாருதி சுசூகி ஸ்விஃப்ட்

2022 டிசம்பரில் அதிகம் விற்பனையான மாருதி சுசூகியின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் உள்ளது. இந்தக் கார், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் கூடிய கச்சிதமான வடிவமைப்புடன் உள்ளது.
அந்த வகையில், 2022 டிசம்பரில், மாருதி சுசூகி 12,061 கார்களை விற்றுள்ளது. இது, 2021 டிசம்பரில் 15,661 யூனிட்களாக இருந்தது. இது 23 சதவீத வீழ்ச்சி ஆகும்.
எனினும், வேகன் ஆர் மற்றும் ஆல்டோ போன்ற பிரபலமான மாடல்களை ஸ்விஃப்ட் விஞ்சியுள்ளது.

மாருதி சுசூகி எர்டிகா

Advertisment
Advertisements

இந்தப் பட்டியலில் மாருதி சுசூகி எர்டிகா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. . எர்டிகா 6 பேர் அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை ஏற்றிச் செல்லக்கூடிய பெரிய வாகனம்.
இது, டிசம்பர் 2022 இல் ஒட்டுமொத்த விற்பனையான வாகனங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

மாருதி சுசூகி டிசம்பர் 2021 இல் 11,840 யூனிட்களை விற்ற எர்டிகாவுடன் ஒப்பிடும்போது 2022 டிசம்பரில் 12,273 யூனிட்களை விற்றது, இது 4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மாருதி சுசூகி பலேனோ

டிசம்பர் 2022 இல் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார் பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் ஆகும். இது, ரூ.6.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில், பலேனோ இந்தியாவில் Tata Altroz, Hyundai i20 மற்றும் Toyota Glanza ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது,
டிசம்பர் 2022 இல், மாருதி சுசூகி பலேனோவின் 16,932 யூனிட்களை விற்றது, 2021 டிசம்பரில் விற்கப்பட்ட 14,458 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், இது 17 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Car

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: