Advertisment

ஜனவரியில் போட்டி போட்டு விற்பனையான பைக்குகள்: முதலிடம் எது தெரியுமா?

2024 ஜனவரி மாதத்தில் அதிகம் விற்பனையான இரு சக்கர வாகனங்கள் குறித்து பார்க்கலாம். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக இரு சக்கர வாகனங்கள் விற்பனை உச்சம் தொட்டுவருகிறது.

author-image
WebDesk
New Update
Best selling two wheeler brands in January 2024

ஜனவரி மாதத்தில் அதிகம் விற்பனையான இரு சக்கர வாகன பிராண்டுகள் இங்கே உள்ளன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இரு சக்கர வாகன விற்பனை ஜனவரி 2024 இல் ஆரோக்கியமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், ஹோண்டா மற்றும் ஹீரோ இடையேயான போட்டி தொடர்கிறது.

Advertisment

சுஸுகி 

ஜப்பானிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சுஸுகி ஜனவரி 2024 இல் 80,511 யூனிட்களை விற்று இரு சக்கர வாகன பிராண்டுகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

பஜாஜ்

4ம் இடத்தில் உள்ள பஜாஜ், 1,93,350 பைக்குகள் விற்பனை செய்துள்ளது. அதன்படி இதன் விற்பனை வளர்ச்சி 35 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பஜாஜ், 1,42,368 பைக்குகள் விற்பனை செய்திருந்தது.

டிவிஎஸ்

கடந்த மாதம் உள்நாட்டு சந்தையில் 2,68,233 யூனிட்களை விற்பனை செய்து, 23.9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து டிவிஎஸ் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிறுவனம், 2023 ஜனவரியில் 2,16,471 யூனிட்களை விற்று இருந்தது.

ஹோண்டா

ஹோண்டாவைப் பொறுத்தவரை, ஆக்டிவா சிறந்த விற்பனையாளராக உள்ளது. ஜனவரி 2024 இல், ஹோண்டா உள்நாட்டு சந்தையில் 3,82,512 யூனிட்டுகளை விற்று, 37.5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஹீரோ

ஹீரோ மோட்டோகார்ப் 2024 புத்தாண்டை கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், ஹீரோ இந்தியாவிலும் இரு சக்கர வாகன விற்பனையில் முன்னணியில் உள்ளது, கடந்த மாதம் 4,20,934 யூனிட் விற்பனையை பதிவு செய்து, 20.4 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Business
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment