ரூ1.5 லட்சம் வரி சேமிப்பு; 5 சிறந்த முதலீட்டு திட்டங்கள் இவைதான்!

முதலீடு செய்ய விருப்பமா? ரூ. 1.5 லட்சம் வரை வரி சேமிப்புடன் நல்ல வருமானம் கிடைக்கூடிய சிறந்த முதலீட்டுத் திட்டங்கள் இங்கே.

Best tax saving investment schemes in tamil: புத்தாண்டு பிறந்துவிட்டது. புத்தாண்டு என்பது புதிய தீர்மானங்களை எடுப்பதற்கும், ஒரு சிறந்த ஆண்டிற்கான வாக்குறுதியை அமைப்பதற்குமான நேரமாகும். இதில், நம்முடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சேமிப்பது தற்போதைய சூழலில் அவசியமாகிறது. சில நிதித் திட்டமிடல் கடினமான காலங்களில் பயணிக்க உதவுவது மட்டுமல்லாமல், வரிகளைச் சேமிக்கவும் உதவுகின்றன. வரிசேமிப்புடன் கூடிய 5 சிறந்த முதலீட்டு திட்டங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.

வருமான வரிப் பிரிவு 80Cக்கு கீழ் வரி சலுகையுடைய பல திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்கள் வரி சேமிப்பு மட்டுமல்ல, நீண்ட காலத்திற்கு சிறந்த வருமானத்தையும் உறுதியளிக்கின்றன. பிரிவு 80C இன் கீழ் நீங்கள் கோரக்கூடிய அதிகபட்ச வரி விலக்கு ரூ. 1.5 லட்சம் ஆகும்.

பொது வருங்கால வைப்பு நிதி (PPF)

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது 15 ஆண்டு கால முதலீட்டுத் திட்டமாகும், இதன் கீழ் முதலீட்டாளர் டெபாசிட், வட்டி மற்றும் திரும்பப் பெறுதல் ஆகியவற்றின் போது வரி விலக்கு பெறுகிறார். PPF இன் முதலீட்டுக் காலம் 15 ஆண்டுகள் என்றாலும், நீங்கள் 20, 25 மற்றும் 30 ஆண்டுகள் வரையிலான பதவிக் காலங்களுக்கு, ஒவ்வொரு 5 ஆண்டுகளாக நீட்டிக்க முடியும்.

தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC)

குறைந்த ஆபத்துள்ள திட்டங்களை விரும்புபவர்களுக்கு தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் ஒரு நல்ல முதலீட்டுத் தேர்வாகும். NSC உங்களுக்கு ஆண்டுதோறும் 6.8 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது ஆனால் முதிர்ச்சியின் போதுதான் செலுத்தப்படும். NSC வைப்புத்தொகைகள் ஐடி சட்டத்தின் 80சி பிரிவுகளின் கீழ் வரி தள்ளுபடிக்கு தகுதி பெறுகின்றன.

சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY)

சுகன்யா சம்ரித்தி திட்டக் கணக்கை ஒரு பெண் குழந்தை 10 வயதை அடையும் வரை அவர்களின் பெயரில் தொடங்கலாம். டெபாசிட்கள் 7.6 சதவீதம் வட்டியைப் பெறுகின்றன. குறைந்தபட்சம் ரூ.250-ல் கணக்கைத் தொடங்கலாம். அதன்பிறகு ரூ.100-ன் பல மடங்குகளில் எந்தத் தொகையையும் டெபாசிட் செய்யலாம். கணக்கில் செய்யப்படும் டெபாசிட்கள் மற்றும் வருமானம் மற்றும் முதிர்வுத் தொகை ஆகியவை வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும்.

ஆயுள் காப்பீட்டு பிரீமியம்

ஒரு ஆயுள் காப்பீட்டு பிரீமியமானது, எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு எதிராக உங்களுக்கு நிதியுதவி வழங்குவது மட்டுமல்லாமல், நீங்கள் செலுத்தும் ஆயுள் காப்பீட்டு பிரீமியமும் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்குக்கு அனுமதிக்கப்படுகிறது. உங்களுக்காகவும், உங்கள் மனைவி மற்றும் உங்கள் குழந்தைகளுக்காகவும் செலுத்தப்பட்ட பிரீமியங்களுக்கான விலக்குகளை நீங்கள் கோரலாம்; உங்கள் பெற்றோருக்கு செலுத்தப்படும் பிரீமியங்களுக்கு எந்த விலக்கும் இல்லை.

உள்கட்டமைப்பு பத்திரம்

வரி செலுத்துவோர் பிரிவு 80CCF இன் கீழ் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட உள்கட்டமைப்புப் பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் வரிச் சேமிப்புப் பலன்களைப் பெறலாம். பிரிவு 80CCF இன் கீழ் விலக்கு பெறுவதற்கான அதிகபட்சத் தொகை ஒரு மதிப்பீட்டு ஆண்டிற்கு ரூ.20,000 ஆகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Best tax saving investment schemes in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express