Mutual Fund | நிதியாண்டின் கடைசி மூன்று மாதங்களில் (ஜனவரி-மார்ச்) வரி செலுத்துவோர் தங்கள் முதலீடுகளை இறுதி செய்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் கிடைக்கும் முதலீட்டு விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவு, ஒரு சில குறிப்பிட்ட கருவிகளில் முதலீடு செய்வதில் ஒரு நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்க அனுமதிக்கிறது.
அந்த வகையில், வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து பார்க்கலாம்.
1) கனரா ரொபேக்கோ இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்டு
2) மிரே அஸெட் இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்டு
3) இன்வெஸ்கோ இந்தியா இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்டு
4) டி.எஸ்.பி இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்டு
5) குவாண்ட் இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்டு
6) பேங்க் ஆஃப் இந்தியா இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்டு
பொதுவாக மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன்பு, சந்தை தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வது நல்லது. குறிப்பாக நீங்கள் பங்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதல் முறையாக முதலீட்டாளராக இருந்தால் இதுபற்றி மேலும் அறிந்துகொள்ள வேண்டும்.
ஏனெனில், பொது வருங்கால வைப்பு நிதி அல்லது தேசிய சேமிப்புச் சான்றிதழ் போன்ற உங்களின் வழக்கமான முதலீடுகளுடன் ஒப்பிடும்போது, இ.எல்.எஸ்.எஸ் முதலீடுகள் உத்தரவாதமான வருமானத்தை வழங்காது. சில நேரங்களில் சந்தை அபாயங்களை கூட சந்திக்க நேரிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“