/indian-express-tamil/media/media_files/2025/04/21/CfK9cm3LmOhZpCsY56FM.jpg)
ஒவ்வொரு நாளும் ரூ. 100 சேமிப்பதன் மூலம் மாதந்தோறும் ரூ. 1.6 லட்சம் வரை ஈட்ட முடியும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் எஸ்.ஐ.பி மூலமாக முதலீடு செய்து இதனை சாத்தியப்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதற்கான செயல்முறை குறித்து பாஸ்வாலா தமிழ் யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை தற்போது காணலாம்.
எந்தவொரு முதலீட்டு திட்டமாக இருந்தாலும், நீண்ட நாட்களுக்கு அதனை தொடரும் போது சரியான லாபத்தை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. எஸ்.ஐ.பி திட்டத்தில் கூட்டு வட்டி வழங்கப்படுகிறது. இதற்காக பங்குச்சந்தைகளில் நல்ல லாபம் அளிக்கக் கூடிய முயூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு முதலீடு செய்யத் தொடங்கியதும் ஓராண்டு நிறைவடையும் போது, அதில் இருந்து 10 சதவீதம் கூடுதலாக அடுத்த ஆண்டில் இருந்து முதலீடு செய்ய வேண்டும். உதாரணமாக, ஒரு மாதம் முழுவதும் ரூ. 30 ஆயிரம் சம்பாதிக்கும் நபர், ஒரு நாளைக்கு ரூ. 100 என்ற வீதம் ரூ. 3000 சேமிக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்த ஆண்டில் இருந்து 10 சதவீதத்தை அதிகப்படுத்தி ரூ. 3,300 என்று சேமிக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் செயல்பட்டால், ஏறத்தாழ 30 ஆண்டுகளின் முடிவில் ரூ. 59,74,133 சேமித்திருக்க முடியும். இந்த தொகைக்கு 12 சதவீதம் வட்டி எடுத்துக் கொண்டாலும், சுமார் ரூ. 2.4 கோடி நம்முடைய கைகளில் இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ரூ. 2.4 கோடியில் இருந்து சுமார் ரூ. 19 லட்சத்தை எடுத்து மாத வருவாயாக மாற்றும் போது 12 மாதங்களுக்கு ரூ. 1.6 லட்சம் உங்களுக்கு கிடைக்கும். இப்படி, ஒரு நாளைக்கு ரூ. 100 முதலீடு செய்வதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ. 1.6 லட்சம் வரை நம்மால் ஈட்ட முடியும்.
இந்த முதலீட்டு நடைமுறையை தொடர்ந்து பின்பற்றும் போது, ஓய்வு காலத்தில் நம்முடைய பொருளாதார தேவைகளுக்காக மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.