பொதுமக்களே உஷார்.. உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் வங்கி ஏடிஎம்- கள் விரைவில் மூடப்படலாம்!

பழைய ரூபாய் நோட்டை வைப்பதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டவையாக இருக்கின்றன

பழைய ரூபாய் நோட்டை வைப்பதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டவையாக இருக்கின்றன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வங்கி ஏடிஎம்

வங்கி ஏடிஎம்

நாடு முழுவதும் ஒரு 1.15 லட்சம் வங்கி ஏடிஎம்-களை மூட வங்கிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்கி ஏடிஎம் :

Advertisment

மக்களின் பணப் பரிவர்த்தனைகளில் முக்கியப் பங்காற்றி வரும் வங்கிகள், மக்கள் வசதிக்காக ஏடிஎம்-கள் மூலம் தேவையான பணத்தை வழங்கி வருகிறது. தற்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் சேர்த்து மொத்தம் 2 லட்சம் ஏ.டி.எம் கள் உள்ளன. இவைகளை தனியார் நிறுவனம் ஒன்று நிர்வகித்து வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் ஒரு 1.15 லட்சம் வங்கி ஏடிஎம்-களை வருகிற 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மூட வங்கிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழைய ரூபாய் நோட்டை வைப்பதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டவையாக இருக்கின்றன.

இதில், தற்போதுள்ள புதிய நோட்டுகளை வைப்பதற்கு சிரமமாக உள்ளது. எனவே, ஏ.டி.எம்-களின் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் மேம்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட வேண்டியுள்ளன. இதற்கு அதிகளவில் பொருட்செலவாகும் என தெரிகிறது. மேலும் ஏ.டி.எம்., களை நிர்வகிக்க தேவையான நிதி நிலைமை மோசமடைந்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisment
Advertisements

அதேபோல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஏடிஎம்-களின் மென்பொருள்கள் மாற்றியமைக்கப்பட்டதினால் ஏற்பட்ட இழப்புகளிலிருந்து நிறுவனங்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. எனவே, நாடு முழுவதும் ஒரு 1.15 லட்சம் வங்கி ஏடிஎம்-களை மூட வங்கிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏடிஎம் சேவை வழங்குவற்கான கட்டணங்கள், பராமரிப்பு கட்டணங்கள், அதிகரித்து வரும் கூடுதல் செலவினங்களை சந்திப்பதற்கான திட்டங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை. இதனை வங்கிகள் ஈடு செய்யாத பட்சத்தில் பெரிய அளவிலான மூடலுக்கு வழி வகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Atm

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: