ஏர்டெல்லின் அடுத்த அதிரடி: வாடிக்கையாளர்களுக்கு ரூ,2000 கேஷ்பேக் அறிவிப்பு!

வாடிக்கையாளர்கள் ரூ. 3500 மதிப்பிலான ரீசார்ஜ்களை தொடர்ந்து 36 மாதங்களுக்கு செய்ய வேண்டும்.

ஏர்டெல் நிறுவனம் நோக்கியா2 மற்றும் நோக்கியா3 ஸ்மார்ஃபோன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2000 கேஷ்பேக் ஆஃபரை அறிவித்துள்ளது.

டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழும் ஏர்டெல்  நிறுவனம், சமீப காலமாக  வாடிக்கையாளர்களுக்கு  புதிய புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது.  ஏர்டெல் நிறுவனத்திற்கு சந்தையில்  போட்டியாக இருக்கும் ஜியோ நிறுவனம்  புதிய  ரீசார்ஜ் திட்டங்கள், 4ஜி ஃபீச்சர் ஃபோன்கள் என புதிய சலுகைகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. ஜியோவின் இந்த புதிய அறிவிப்புகள்  வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில், சமீபத்தில் ஜியோ நிறுவனம், குறிப்பிட்ட நிறுவனத்தை சேர்ந்த 22 ஸ்மார்ஃபோன்களுக்கு ரூ,2,200 கேஸ்பேக் ஆஃபரை அறிமுகப்படுத்தியது. இதன்படி, வாடிக்கையாளர்கள் அந்நிறுவனம் அறிவித்த ஸ்மார்ஃபோன்களை வாங்கினால் அவர்கள்களின் வ்ங்கிக் கணக்கில் கேஸ்பேக் செலுத்தப்பட்டுவிடும் என்று தெரிவித்திருந்தது. ஜியோவின் இந்த அறிவிப்பினால், பல ஸ்ம்டார்ஃபோன்கள் அதிகளவில் விற்பனையாகின எனவும் மொபைல் நிறுவனங்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது ஏர்டெல் நிறுவனம் நோக்கியா ஸ்ம்டார்ஃபோன்களுக்கு கேஷ்பேக் ஆஃபரை அறிவித்துள்ளது. இதன்படி, ஹெச்எம்டி குளோபல்   நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ள ஏர்டெல் நிறுவனம்,  நோக்கியா2 மற்றும் நோக்கியா3 ஸ்மார்ட்ஃபோன்களுக்கு ரூ. 2000 கேஷ்பேக் ஆஃபரை வழங்குகிறது.  ரூ. 6,999 விற்பனையாகும் நோக்கியா2 மொபைல் ரூ 4,999 க்கும், நோக்கியா3 மொபைலை   ரூ. 9,499 விலையில் இருந்து ரூ. 7,499 விலைக்கு வாடிக்கையாளர்களால் வாங்க முடியும். இந்த கேஷ்பேக்கை பெற ஏர்டெல்  வாடிக்கையாளர்கள் ரூ. 3500 மதிப்பிலான ரீசார்ஜ்களை தொடர்ந்து 36 மாதங்களுக்கு செய்ய வேண்டும்.

முதல் 18 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்த பின்பு வாடிக்கையாளர்களுக்கு ரூ, 500 அவர்களின் கணக்கில் அளிக்கப்படும். அடுத்த 18 மாதங்கள் ரூ.3500 மதிப்பிலான ரீசார்ஜ் முடிந்த  பிறகு மீதத்தொகையான  ரூ.1500  வழங்கப்படும்.  அதாவது ஒரு வாடிக்கையாளர்களுக்கு இரண்டு தவணையாக  பிரித்து ரூ.2000 கேஷ்பேக் வழங்கப்படும்.

 

 

×Close
×Close