கோவிட் பெருந்தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) ஒரு பெரிய நிவாரணமாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை MSMEகளுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் ரூ.9,000 கோடி நீட்டிக்கப்படும் என்று அறிவித்தார்.
மத்திய பட்ஜெட்டை அறிவிக்கும் போது, சீதாராமன், இது MSME களுக்கு ரூ.2 லட்சம் கோடி கடனுக்கான பிணையத்தை செயல்படுத்தும் என்றார்.
மேலும், இது பாதிக்கப்பட்ட மற்றும் நிதி பற்றாக்குறை உள்ள MSME துறைக்கு நிதி ஓட்டத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்மொழியப்பட்ட திட்டம் ஏப்ரல் 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும்.
பொதுவாக MSMEகளுக்கு கடன் கொடுக்கத் தயங்கும் வங்கிகளுக்கு இந்தத் திட்டம் ஆறுதல் அளிக்கும்.
அரசாங்கத்தின் அவசரக் கடன் வரி உத்தரவாதத் திட்டம் (ECLGS) முன்னதாக மார்ச் 2022 முதல் மார்ச் 2023 வரை நீட்டிக்கப்பட்டது. அதன் உத்தரவாதத் தொகை ரூ. 50,000 கோடியால் விரிவுபடுத்தப்பட்டு மொத்தம் ரூ. 5 லட்சம் கோடிக்கு விரிவுபடுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/