Big update for SBI customers: கொரியர் அல்லது மின்னஞ்சல் வழியாக எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்கள் தங்களின் கே.ஒய்.சி. ஆவணங்களை வீட்டில் இருந்தே அப்டேட் செய்யலாம் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அந்த வங்கி. கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தங்கள் வங்கி கிளைகளுக்கு, பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் இருந்து தங்களின் கே.ஒய்.சி. ஆவணங்களை அனுப்பலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. KYC ஆவணங்களை அனுப்புவதற்கான காலக்கெடு முடிவடைய உள்ளது என்பதை உங்களின் வங்கி உங்களுக்கு அறிவித்திருக்கும் பட்சத்தில், நீங்கள் ஆவணங்களை ஸ்கேன் செய்து உங்களின் வங்கிக் கிளைக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என்று ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளது எஸ்.பி.ஐ வங்கி.
KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்க வாடிக்கையாளர்கள் பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்: பாஸ்போர்ட், வாக்காளார் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் , ஆதார் அடையாள் அட்டை, ஊரக வேலைவாய்ப்பு அட்டை, பான் கார்ட். என்.ஆர். ஐ வாடிக்கையாளர்கள் பாஸ்போர்ட் அல்லது ரெசிடென்ஸ் விசாவின் நகல்களை இதற்கு சமர்பிக்கலாம்.
குடியிருப்பு விசா நகல்களை வெளிநாட்டு அலுவலகங்கள், நோட்டரி, இந்திய தூதரகம், நிருபர் வங்கிகளின் அதிகாரிகள், எஸ்பிஐயின் அங்கீகரிக்கப்பட்ட கிளை மூலம் கையொப்பங்கள் சரிபார்க்கப்பட வேண்டும். 10 வயதிற்கும் குறைவாக இருக்கும் நபர்களின் வங்கிக் கணக்குகளை நிர்வகிக்கும் நபர் அவருடைய அடையாள அட்டையை வங்கியில் சமர்பிக்க வேண்டும். மைனர் வாடிக்கையாளரின் அடையாளம் மற்றும் முகவரியை சரிபார்க்க எந்தவிதமான அடையாள அட்டைகளையும் சமர்பிக்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil